2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

திருமணம் செய்ய மறுக்கும் காதலரை பயமூட்டுவதற்காக அவசர பிரிவு பொலிஸாரை வரவழைத்த பெண்

Kogilavani   / 2011 ஜனவரி 07 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தன்னை  திருமணம் செய்துகொள்வதற்கு தனது காதலரை வற்புறுத்துவதற்காக பெண்ணொருவர் அவசரப் பிரிவு இலக்கமான 911 இற்கு அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

சிகாகோ நகரைச் சேர்ந்த அனா பெரெஸ் என்ற 40 வயது  பெண் தனது காதலன் தன்னை தாக்குவதாகக் கூறி,  பொலிஸ் அவசரசேவை இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் பொலிஸார் தனது வீட்டிற்கு வந்தவுடன் குறித்த பெண் தனது கதையை மாற்றிக்கொண்டுள்ளார். தன்னை திருமணம் செய்ய மறுக்கும் தனது காதலரை பயமூட்டுவத்றகாகவே பொலிஸாரை வரவழைத்ததாக அப்பெண் ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவசர பிரிவு இலக்கத்தை தவறாக பயன்படுத்தியமைக்காக பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் ரொனால்ட் பொன்டெகோர் இது தொடர்பாக கூறுகையில்,  'அந்த பெண் ஆபத்தில் இருப்பதாக  நம்பி ஸ்தலத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால்  அபத்தமான சம்பவம் ஒன்று நடப்பதையே அங்கு அவர்கள்  அறிந்துக்கொண்டுள்ளனர்.
தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு  காதலரை வற்புறுத்தச் செய்வதற்காக அப்பெண் அவசர பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்' என்று தெரிவித்தார்.

அக் காதலன் பெரஸை திருமணம் செய்துக்கொள்வதற்கு விரும்பவில்லையென்றும் அவளது காதலை துண்டித்து விடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸ் அதிகாரி  மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .