Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 04 , பி.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் அதிக பருமனான மனிதரான போல் மாஸன் தனது நிறை குறித்த காரணத்தை ஊடகமொன்றிற்கு அறிவித்துள்ளார். அதாவது, தனது காதல்தான் அவரை அளவுக்கதிரமாக உணவு உண்பவராக உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவருடைய உடலின் 444 கிலோகிராம்களாகும்.
அதேவேளை தான் இப்போது ஓரளவு எடைகுறைந்துள்ளதால் தனக்கு காதலியொருவரும் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு போல் மாஸன் நடக்க முடியாதளவுக்கு பருமனான உடலுடன் காணப்பட்டார். அவரின் உயிரை பாதுகாப்பதற்காக அவருக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென்றும், அவரது உணவுகளை வெகுவாக குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அதன்பின் அவர் 190 கிலோ எடைகுறைந்துள்ளார்.
'எனக்கு உணவு என்பது போதை போன்றது. அதுதான் என்னை இந்தளவு உடல் பருத்த மனிதனாக்கியுள்ளது. நான் இளமையாக இருக்கும் போது ஒரு போதும் இந்தளவு உணவை உண்டதில்லை. நான் அப்போது மெலிவாகவும் சுறுசுறுப்பானவராகவும் காணப்பட்டேன்' என்கிறார் போல்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
'நான் 20 களில் இருந்த போது, எதிர்கொண்ட துன்பமான நிகழ்வின் பின்பே நான் இந்தளவு உணவுகளை உண்ணத்தொடங்கினேன். உடைந்த இதயத்தில் விழுந்த இடைவெளியை நிரப்புவதற்காக நான் உணவு உட்கொண்டேன் என்று கூற முடியும்.
எனக்கு 21 வயது இருக்கும்போது, நான் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவள் எனக்கு ஒரு உலகையே உருவாக்கிக் கொடுத்தாள்.
அவள் மற்ற பெண்களிலிலும் இருந்து வேறுபட்டவள். அவளுக்கு அப்போது 39 வயதாக இருந்தது. என்னைவிட வயதில் மூத்தவள்.
நான் அவளை சார் என்று அழைத்தேன். அவளை மதித்து நடந்தேன். அவள்தான் என் வாழ்க்கை என்று நினைத்தேன்.
அவளுக்கு ஒரு வீடு இருந்தது. நாங்கள் முழுநேரத்தையும் அங்கு செலவிட்டோம். நான் அந்த இடத்தை கட்டி முடிப்பதற்கு உதவியபின் அவள் உறவை முறித்துக்கொண்டாள்.
இது 1986 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது எனக்கு 26 வயது. எனக்கு அவள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் அவள் மற்றொருவனை தேடிக்கொண்டாள். பின்னர் அவளுக்கு அவனுடன் நிச்சயதார்த்தமும் நடந்தது.
இச்சம்பவத்தின் பின் எனது தந்தை இறந்துவிட்டார். என்னுடைய தாயின் உடல் நிலைமை மோசமாகியது. எனது தாயின் இடுப்பு உடைந்தது. அவர் சக்கர நாற்காலியிலே அதன் பின் நடமாடினார். நான் அவரை பார்த்துக்கொள்வதற்காக முழுநேர பாதுகாவலனாக மாறினேன். ஏன்னால் அந்நிலைமையை சமாளித்துக்கொள்ள முடியவில்லை.
அதன்பின் நான் நான் உணவின் பக்கம் கவனத்தை செலுத்தினேன். எனக்கு ஏதாவது சில ஆறுதல், சுகம் தேவைப்பட்டது.
அதை எனது குடும்பத்திடமிருந்தோ அல்லது நான் நேசித்த பெண்ணிடமிருந்தோ பெற முடியவில்லை. சாப்பிடுவதன் மூலமே அது கிடைத்தது. அதன்பின் ஒரு வருடத்தில் 70 கிலோ எடை அதிகரித்தது. 69 மாறினேன். நான் இனிப்புப் பண்டங்களை எனது ஆகாரமாக தேர்ந்தெடுத்தேன். நான் ஒரு குழந்தையை போன்று இருந்தேன். எனக்கு தொடர்ச்சியாக உணவு தேவைப்பட்டது' என அவர் தெரிவித்துள்ளார்.
போல், இறைச்சி, மீன் மற்றும் சிப்ஸ் பீட்ஸா போன்றவற்றை அளவுக்கதிமாக உட்கொண்டார்.
ஒரு கட்டத்தில் அவரின் வீட்டை அடகுவைத்து பெறப்பட்ட பணம் திருப்பிச் செலுத்தப்படாததால் வீடு பறிக்கப்பட்டது. அவருடைய சகோதரி ஜூடித் மற்றும் லூயிஸ் அவருடன் நீண்ட காலமாக கதைப்பதையே விட்டுவிட்டனர்.
'எனக்கு அவர்களை பிடிக்கும் ஆனால். அவர்களின் பரம்பரை சொத்துகளை செலவழித்து வாழ்ந்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.
'நான் 24 மணித்தியாலமும் நிறுத்தாமல் உணவை உட்கொண்டே இருப்பேன். நான் இரவில் நித்திரைகொள்வதில்லை. ஏனென்றால் நான் முடிவின்றி உணவு உட்கொள்வேன். நான் உணவில் மட்டுமே குறியாக இருப்பேன். எங்கு உணவை வாங்குவது, சாப்பிடுவது மற்றும் அடுத்த உணவை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்பது குறித்துதான் யோசித்துக் கொண்டிருப்பேன்' எனக் கூறும் போல் 2000 ஆம் ஆண்டு நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு அவரை தூக்குவதற்கு வசதியாக படுக்கையறையில் கப்பி பொருத்தப்பட்ட விசேட வீடொன்று அவருக்குத் தேவைப்பட்டது.
அவருக்கு 48 வயதாக இருந்தபோது 127 கிலோ எடை குறையாவிட்டால் இரு வருடங்களுக்குள் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். 2009 ஆம் ஆண்டு அவரின் வயிற்றின் அளவை குறைப்பதற்காக காஸ்ட்ரிக் பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக அவரால் குறைந்தளவு உணவையே உண்ணமுடியும்.
ஆதனால் அவரின் எடை தற்போது 234 கிலோவாக குறைந்துவிட்டது. சக்கர நாற்காலி மூலம் அவரால் நடமாடவும் முடிகிறது.
கடந்த 20 வருடங்களாக காதலி எவரும் இல்லாதிருந்த போலின் வாழ்க்கையில் மீண்டும் வசந்தம் வீச ஆரம்பித்துள்ளது. தற்போது ஒரு பெண்ணை காதலிக்கிறாராம் போல். ஏற்கெனவே திருமணமான அந்த பெண்ணுக்கு ஒரு மகனும் உள்ளான். அந்த சிறுவனுக்கு தான் முன்னுதாரணமாக வாழ விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
'ஒரு பெண் எனக்கு உதவ முன்வந்துள்ளாள். அவளின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. அவள் மிகவும் வெட்க சுபாமுடையவள். அவளுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளக்கூடிய அளவுக்கு நான் எனது எடையைக் குறைக்க முடியும் என நம்புகிறேன்' என்கிறார் போல்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025