2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

கிறிஸ்மஸ் மரத்தை திருமணம் செய்யும் நபர்

Kogilavani   / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனின் வைட்ஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த அன்டி பார்க் என்பவர்  ஒவ்வொரு நாளும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடுவதால் புகழ்பெற்றவர். அவர் இப்போது தனது கிறிஸ்மஸ் மரத்தை திருமணம் செய்துக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளாராம்.

47 வயதான அன்டி பார்க்,  கடந்த 17 வருடங்களாக ஒவ்வொரு நாளும் நத்தார் விருந்தை உண்டு வருகின்றார் என்று உள்ளுர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மெல்காஷம் நகரைச்  சேர்ந்த, விவாகரத்துப் பெற்றவரான அன்டி பார்க் 'மிஸ்டர் கிறிஸ்மஸ்'  எனவும் அழைக்கப்படுகிறார். அதேவேளை  தனது நண்பர்கள் தன்னை கிறுக்கர் என எண்ணுவதாகவும் அன்டி ஒப்புக்கொண்டுள்ளார்.

'நான் எனது நத்தார் மரத்தை வேறு எதையும்விட அதிகமாக நேசிக்கின்றேன். அதனால் நான் அதை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்' என்கிறார் அவர்.

'நான் ஏற்கனவே மோதிரம்  வாங்கிவிட்டேன். ஆனால் மரத்தின் எந்த கிளையில் இந்த மோதிரத்தை போடுவது என்பது எனக்கு நிச்சயமில்லாமல் இருக்கிறது.

ஒரேயொரு பிரச்சினை என்னவென்றால் யாரை இந்த திருமணத்திற்கு பாதிரியராக அழைப்பது என்பதுதான் என அன்டி தெரிவித்துள்ளார்.

'ஏன் மரத்துடன்  மனவாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாது என்பதற்கான காரணம் எதையும் நான் காணவில்லை. ஒரு சிலர் அவர்களது வளர்ப்புப் பிராணியை திருமணம் செய்துக்கொள்வதை  நான்  கேள்விப்பட்டிருக்கிறேன். இந்நிலையில் ஏன் என்னால் மட்டும் இந்த மரத்தை திருமணம் செய்துக்கொள்ள முடியாது?' என அவர்  கேள்வி எழுப்புகிறார் .

அன்டி 1993 ஆம் ஆண்டு  முதன்முதல் கிறிஸ்மஸ் கொண்டாடத் தொடங்கினார். அப்போதிருந்து இதுவரை  6,000 தடவை அவர் கிறிஸ்மஸ் இரவு விருந்தை உட்கொண்டிருப்பார் என கணிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்வில் சலிப்பேற்பட்டிருந்த ஒரு ஜுலை மாதம் திடீரென கிறிஸ்மஸ் அலங்காரங்களை  மேற்கொண்டாராம் அன்டி. அந்த அலங்காரம் அவருக்கு மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. எனவே தினமும் அவர் கிறிஸ்மஸ் கொண்டாடி வருகிறார்.
 


You May Also Like

  Comments - 0

  • asker Wednesday, 29 December 2010 05:11 PM

    பைத்தியம் சிரிக்குகும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .