Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமக்கு ஆண் குழந்தை பிறந்ததுவிட்டதென்ற சந்தோசத்தில் மிதந்த ஒரு தம்பதி, அக்குழந்தை பிறந்து ஒரு மாதத்தின் பின்பே தமக்கு பிறந்தது உண்மையில் பெண் குழந்தை என்பதை கண்டறிந்துள்ளது.
தென்னாபிரிக்கா, வெரீனிஜிங் பிரதேசத்தைச் சேர்ந்த மெடிலிஷியா (வயது 29) என்ற பெண்ணுக்கும், கென்னத் (வயது 30) என்ற ஆணுக்குமே இந்த வியப்புமிக்க அனுபவம் ஏற்பட்டுள்ளது.
இக்குழந்தை பிறந்தபோது ஆண் பாலுறுப்பை கொண்டிருப்பதுபோல் தென்பட்டதாம். ஆதனால் அவர்கள் அக்குழந்தைக்கு கென்னி எனப் பெயரிட்டிருந்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல உருபில் மாற்றம் ஏற்பட்டது.
அதனால் அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்துசென்றனர்.
அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள் அக்குழந்தை உண்மையில் பெண் என்பதை அறிவித்தனர்.
அந்தக் குழந்தையின் பாலுறுப்பானது மிகவும் பெரிதாக இருந்ததே அது ஆண் எனக் கருதப்படக் காரணம். அந்தக் குழந்தையின் உடலில் ஹோர்மோன் கோளாறு காரணமாகவே இந்தநிலை ஏற்பட்டிருந்தது.
அதன்பின் குழந்தையை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்த பெற்றோர் தீர்மானித்தனர்.
சிகிச்சைக்குப் பின் அந்தக் குழந்தையின் பெயர் மிகென்ஸி என மாற்றப்பட்டுள்ளது.
குழந்தையின் தாயான மெடிலிஷியா குறிப்பிடுகையில் 'வைத்தியர்இ மெகென்சியா உண்மையில் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை, இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என தெரிவித்தார். ஆனால் எங்களுக்கு அழகான பெண் குழந்தையொன்று கிடைத்துள்ளது. இது குறித்து நாம் பெருமையடைகிறோம்' என தெரிவித்துள்ளார்.
xlntgson Sunday, 26 December 2010 09:37 PM
பால் விகாரம்
இயற்கை குறைபாடு
செக்ஸ் ஆணா பெண்ணா என்று அறிந்து கொள்ள முடியாத கஷ்டம் டாக்டருக்கே உண்டென்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை
தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களாக இவர்கள் மாறுவதும் இவர்களை மத நம்பிக்கைக்கு கொண்டுவர இயலாத கஷ்டங்களும் உண்டு
இவர்களுக்காகவே ஒருபாற் திருமணங்கள் ஆதியில் அனுமதிக்கப்பட்டன என்பது கவனிக்கற்பாலது
பால் மாற்று சிகிச்சைகளிலும் சிலர் பலன் அடைகின்றனர் என்றாலும் கூட இயற்கை, ஒன்றில் இவர்கள் ஆண், பெண் என்று தான் சேர்க்கிறது ஆணும் பெண்ணும் அற்ற என்பது வெளித்தோற்றமே,
செயலில் தெரியும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025