Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவிலுள்ள உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனமொன்று புதிய வகையிலான உள்ளாடையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவதுஇ உடலிலிருந்து வெளியேறும் வாயுவினால் எழும் மணத்தை இந்த ஆடைகள் மறைக்குமாம்.
இந்த உள்ளாடைகளானது பல இழை அடுக்குகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றீடு செய்துகொள்ள முடியும். அத்துடன் உள்ளாடையின் இடுப்பு மற்றும் கால்களுக்கான பகுதிகளில் இலாஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளதால் வாயு வெளிச்செல்வது தடுக்கப்படும்.
இதனால் இவ்வுள்ளாடையை அணியும்போது உடலிலிருந்து அசுத்த வாயு வெளியேறினாலும் அது உள்ளாடைக்குள் தேங்குவதால் சூழலில் துர்நாற்றம் தவிர்க்கப்படும்.
இந்த உள்ளாடையைக் தயாரித்த 'அண்டர்டெக்' நிறுவனத்தின் தலைவர் பக் வெய்மர் இது குறித்து குறிப்பிடுகையில் இந்த ஆடையானது அசுத்தமான மனித வாயுவிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
'இது குறித்து பல நகைச்சுவைகள் உள்ளன. இந்நிலையில் இந்த ஆடை ஒரு நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
எந்த வேளையிலும், குறிப்பாக படுக்கையில், சமூக நிகழ்வுகள், உத்தியோகபூர்வ கூட்டங்களில் பங்குபற்றும்போது அல்லது வாகனங்களில் மற்றும் விமானத்தில் பயணம் செய்யும்போது இதனை அணிந்துக்கொள்ள முடியும்' என அவர் கூறினார்.
இந்த ஆடைகளை சலவை இயந்திரத்திலும் சலவை செய்ய முடியும். அதிலுள்ள உள் இழைகள் பாவனையைப் பொறுத்து, பல மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை சுமார் 750 - 1000 ரூபாவாகும்.
xlntgson Thursday, 09 December 2010 09:18 PM
நாகரிகத்தின்பெயரால் செய்யப்படும் அநாகரிகம்தான் இது இவ்வளவுகாலம் எவ்வாறு மனிதர்கள் ஆடை அணிந்தார்களாம்?
குழந்தைகளுக்கு அணிவிக்கும் நப்பி அல்லது டயாப்பர்களினால் தாய்மார் பிள்ளைகளைப்பற்றிய கவன ஈனத்துக்குக்காரணமாகி பிள்ளைகள் சொல்லிக் கொள்ளமுடியாத உள அழுத்தத்துக்கு ஆளாவதாக கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது, பெற்றுக்கொள்வது ஒன்றோ இரண்டு அதைக்கூட இறுக்கமாக அடைத்து வைத்ததுபோல் அழுத்தத்தில் வைக்க?
நமக்கே தெரியுமே, கழட்டிவிட்டு இருந்தால் எவ்வளவு சுகம் காற்றோட்டம் என்று!
நான் இது போன்ற நவீனங்களை புறக்கணிப்பேன்!
Reply : 0 0
shan Wednesday, 15 December 2010 02:57 PM
இதை மட்டும்தான் ப்ரீ யா செய்துகொண்டு இருந்தோம் இதுக்கும் ஒரு ஆப்பு வச்சிட்டீங்களா???
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025