Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 28 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில், மூன்று வயதிலிருந்து தனது பாட்டனாரிடம் குங்பூ கலையை கற்றுக்கொண்ட பெண்ணொருவர் தற்போது மிகப்பெரிய குங்பூ வீராங்கனையாகியுள்ளதுடன் 9 தொன்னுக்கும் அதிக நிறையுடைய 6 கார்களை ஒன்றாக கட்டி இழுத்துள்ளார்.
ஸாங் டிங் டிங் என்ற வயது 53 என்றப் பெண்ணே தனது திறமையால் இவ்வாறு கார்களை கட்டி இழுத்துள்ளார். 'எனது பாட்டனார் இக்கலையை தனது மகனுக்கு பயிற்றுவிக்க விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால் எனது பெற்றோருக்கு ஒரே ஒரு பெண்குழந்தை மட்டும்தான். அதன்பின்னர் என்னை பலமிக்க பெண்ணாக உருவாக்கியதில் பெருமையடைந்தார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
டிங் டிங் அண்மையில் பெய்ஜிங் நகரில் வைத்து தனது திறமைகளை பொதுமக்களுக்கு காண்பித்தார். 50 அடி தூரம் வரை அவர் கார்களை இழுத்துவந்தார்
இந்நிகழ்வின்போது பார்வையாளர்களான பல ஆண்கள் அந்த கார்களை இழுக்க முயன்று தோற்றுப்போன நிலையிலேயே டிங் டிங் அந்த முயற்சியில் ஈடுபட்டார். அவர் அந்தக் கார்களை இழுத்தபோது அவை நகர தொடங்கியமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
'நான் இதற்கு முன்பு இப்படி கார்களை இழுத்ததில்லை. இது முதல் முறையென்பதால் சிறிதளவு களைத்துவிட்டேன்' என்று கூறியுள்ளார் டிங் டிங்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025