2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

காதல் சல்லாபத்தில் கட்டில் சத்தம்; நீதிமன்றில் நிறுத்தப்பட்ட காதல் ஜோடி

Kogilavani   / 2010 நவம்பர் 25 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காதல் சல்லாபத்தின் போது கட்டிலிலிருந்து அதிகமான சத்தம் ஏற்பட்டதால் ஜேர்மனியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இருவர் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பேர்லின் நகரைச் சேர்ந்த ஸ்டெபானி மியுலர் (வயது 24) என்பவர் தனது காதலானான லூகாஸ் ஸெட்ஸ்ச் (25) என்பவருடன் நடத்திய சல்லாபத்தின் ஏற்பட்ட கட்டில் ஒலி அயலவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியதாம்.

பொலிஸார் இது தொடர்பாக உள்நாட்டு ஊடகமொன்றிற்கு தெரிவிக்கையில் 'இக் காதல் ஜோடி தொடர்பாக 10 முறைப்பாடுகளை அயலவர்களிடமிருந்து நாங்கள் பெற்றுள்ளோம்' என்று கூறியுள்ளனர்.

இந்த ஜோடி ஒலிமாசடைதலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் பொலிஸாரினால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அபராதத் தொகையை செலுத்த மறுப்புத் தெரிவித்தது. அதையடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஹோட்டல் ஊழியரான மியூல்லர்  'நாங்கள் அந்தளவு  சத்தமிடவில்லை' என்று நீதிமன்றில் தெரிவித்தார்

அதற்கு பதிலளித்த நீதிபதி ' நீங்கள் இல்லை,  உங்களது கட்டில் சத்தமிட்டுள்ளது. எங்களிடம் சாட்சிகளின் அறிக்கைகள் இருக்கின்றன. நீங்கள் இருவரும் இரவு 11.30 மணிமுதல் அடுத்தநாள் காலை 1 மணி வரை சல்லாபத்தில் ஈடுப்பட்டபோது  ஏற்பட்ட சத்தம் அருகிலிருந்தவர்களுக்கு தொந்தரவாக அமைந்துள்ளதாக அயலவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

லூகாஸ் ஸெட்ஸ்ச் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில் 'உண்மையில் அது சாதாரண சல்லாபம்தான்' என்றார். எனினும் இறுதியில் சாட்சிகள் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதால் நீதிபதி இவ்வழக்கை தள்ளுபடி செய்தார்.


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 26 November 2010 09:09 PM

    அங்கேயும் கூட நம் நாட்டுக் கதை தானா? அயலவர்களுக்கு வேறு வேலை இல்லை போலும்!
    ஒரு அயலவர் தனக்கு நிர்வாணத்தை காட்டுவதாக முறைப்பாடு செய்த பெண் ஒருவரின் பக்கத்துவீட்டுக்காரரை கையும் மெய்யுமாக பிடிக்க பொலீஸ்காரர்கள் விரைந்தனராம். போய் பார்த்த போது அப்பெண்ணின் வீட்டுக்கு இடையே ஏழு அடி மதில் சுவரை கண்டு அப்பெண்ணிடம் வினவினாராம் எங்கே என்று? அவர் ஓடி வந்து ஒரு நாற்காலியைத் தூக்கிப்போட்டு அதில் ஏறி நின்று பார்க்குமாறு சொன்னாராம்!
    இது எங்கேயும் நடந்ததில்லை, இலங்கையில் நடந்தது. சகோதர மொழி ஊடகத்தில் கண்டேன்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 27 November 2010 09:05 PM

    அச்சில் வார்க்க இயலாத வார்த்தைகள் பாராளுமன்றத்தில் பேசப்பட்டால் அவற்றை நீக்க சபாநாயகர் உத்தரவிடுவார். அவ்வாறான பேச்சை பாராளுமன்றத்தில் பேசாவிட்டால் வேறு எங்கே பேச இயலும்?
    சில சொற்களை காதும் காதும் வைத்தாற் போல சொல்ல இயலாமல் இருக்கும் போது,அப்படி சொன்ன விடயமும் பலருக்கு பரவும் இந்த காலத்தில்,எது எதற்கெல்லாமோ போட்டி வைக்கின்றனர்,ரகசியம் காப்பாற்றுவது யார் என்று போட்டி வைத்து பரிசளிக்கலாம்.
    எஸ் எம் எஸ்ஸில் ரகசியம் சொன்னாராம் ஒருவர்,ஒரு பெண்ணுக்கு,இப்போது சிறை கம்பியை திருப்பி திருப்பி எண்ணுகிறாராம்!

    Reply : 0       0

    Nafar Saturday, 27 November 2010 11:14 PM

    இது ஒரு விடயம் அதற்கு கமெண்ட் வேறு. ஏன் இவைகளுக்கு இப்படி அக்கறை எடுத்து கொள்ளுகிறார்களோ தெரியவில்லை. இந்த சைட் இற்கு மட்டும் கமெண்ட் நிறையவே வருகிறது.

    Reply : 0       0

    xlntgson Sunday, 28 November 2010 09:55 PM

    nafar, இதில் என்ன புதினம்?
    அரசியல் விடயங்களில் அலுத்துப்போன நிலையில் இம்மாதிரியான சமூகவியலில் அக்கறை செலுத்தினால் என்ன? அக்கறை எடுக்காமலா நீங்கள் அபிப்பிராயம் சொல்கிறீர்கள்?
    யார் உங்களிடம் கேட்டது?
    கருத்து சொல்லும் வசதியே இல்லாமல் செய்யவேண்டும் என்கிறீர்களா?
    வேலை அற்றவர்கள் தான் கருத்து சொல்வார்களா?
    நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வெட்கமா?
    எனக்கு xlntgson@gmail.com என்று பிரத்தியேகமாக அனுப்பிவையுங்களேன்.
    கேள்வி: எங்கே அச்சில் வார்க்க இயலாத வார்த்தைகளை பிரயோகிக்க இயலும்?
    பூட்டிய அறையில்?

    Reply : 0       0

    MAHSMALI Monday, 29 November 2010 03:35 PM

    இவர்கள் தான் நாகரிகம் தெரிந்தவர்கள் என உலகம் முழுதும் காதுவைத்து இருகமுடியலே பார்த்தால் இவர்கள் தான் காட்டுவாசிகள்.

    Reply : 0       0

    xlntgson Monday, 29 November 2010 08:52 PM

    கட்டில் சத்தம் பற்றி கே.பாலச்சந்தர் இயக்கிய அந்த நாள் படம் ஒன்று நினைவுக்கு வருகிறது
    அக்காள் இருக்க தங்கை முந்திக்கொண்டு திருமண முடித்து இருவரும் தாய்வீட்டிலேயே வாழ்கின்றனர்.
    அவளுக்கு இரவில் தூக்கம் வரவில்லை. பக்கத்து அறையில் எழும்பும் கட்டிலோசை அதை அவள் குறிப்பால் உணர்த்தப்படும் பாடு, அப்பப்பா!
    அவள் ஒரு தொடர்கதை என்று நினைக்கின்றேன்.
    அந்தக் காலத்தில் அவ்வளவு மென்மையாக கதை எடுத்திருக்கின்றனர்.
    ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து குமரிப்பெண்கள் இருந்த காலம். ஏழு பெண் பிள்ளை பெற்றும் ஆண்டியாகாக் காலம்!

    Reply : 0       0

    xlntgson Wednesday, 01 December 2010 08:53 PM

    உதட்டசைவை பதிவு செய்யும் ஒரு விஞ்ஞான நுட்பத்தை ஜேர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்களாம் ரகசியம் எளிதில் பரிமாறிக்கொள்ளப்படும். electromography என்று இது அழைக்கப்படுமாம்.
    காதலர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
    ஆனால் உண்மையில் பேச இயலாத காது கேட்கக்கூடியவர்களுக்கே இது கண்டு பிடிக்கப்பட்டதாம்.
    கெட்டவார்த்தையையும் நல்லவார்த்தையையும் எப்படி இனம் காணுவார்களோ?
    வார்த்தை ஒன்று தான், மெல்ல சொன்னால் ஓர் அர்த்தம், சத்தமாக சொன்னால் ஓர் அர்த்தம், தனிமையில் சொன்னால் ஓர் அர்த்தம் பலர் முன்னிலையில் சொன்னால்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .