2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பிளாஸ்டிக் அழகிகளுக்கு அழகுராணி போட்டி

Kogilavani   / 2010 நவம்பர் 25 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலமாக தம்மை அழகாக்கிக் கொண்டவர்களுக்கு  மாத்திரமான அழகுராணி போட்டியொன்று நடத்தப்படுகிறது.

இந்த 'மிஸ் பிளாஸ்டிக் 2010' தேசிய சுற்றுப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 22 போட்டியாளர்களும் முதலிடத்திற்காக மிகக் கடுமையான போட்டியிலுள்ளதாக நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போட்டியில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை செய்து அழகை பெற்ற பெண்கள் மட்டுமே போட்டியிட முடியும். அத்துடன் போட்டிக்காக தெரிவுசெய்யப்படுபவர்கள் சத்திரசிகிச்சை செய்ததை நிரூபிப்பதற்காக மருத்துவ சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.

நடுவர்கள் அவர்களது அழகிற்கு  புள்ளிகளை வழங்குவார்கள். அதேவேளை மருத்துவர்கள் குழாமொன்று  பிளாஸ்டிக் சத்திரசிகிச்சையின் தரத்திற்கேற்ப விசேட புள்ளிகளை வழங்கும்.

இதில் வெற்றிப்பெறுபவர் சர்வதேச மிஸ் பிளாஸ்டிக் அழகி போட்டியில் பங்குபற்ற தெரிவு செய்யப்படுவார்.

போட்டியாளர்களில் ஒருவரான 27 வயதான டிமியா கேர்டெஸ்ட் தெரிவிக்கையில் 'எனக்கு 17 வயதிருக்கும் போது  நான் காதுகளை பிளாஸ்திக்  சத்திரசிகிச்சை மூலம் அழகாக்கிக் கொள்ள  எனது தாயாரிடம் அனுமதி பெற்றேன். அதன்பின் எனக்கு திடீரென தன்னம்பிக்கை வந்தது. அப்போதிலிருந்து நான் இயற்கையாக உள்ள அழகை மேலும் மெருகூட்டிக்கொள்ள தவறியதில்லை' எனக் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .