Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 21 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணர்கள், சிறுமியொருத்தியின் கையொன்றை 3 மாத காலம் அவளின் காலுடன் பொருத்தியிருந்ததன் மூலம் பாதுகாத்துள்ளனர்.
மிங் லீ எனும் 9 வயதான இச் சிறுமி, கடந்த ஜூலை மாதம் பாடசாலைக்கு செல்லும் வழியில் வந்த டிரக்டர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார். இதன் போது ட்ரக்டர் டயர், குறித்த சிறுமியின் கைமீது ஏறியதால், அந்த கை மணிக்கட்டுவரை மிகவும் மோசமாக பாதிப்படைந்திருந்தது. அதனால் மருத்துவர்கள் தற்காலிகமாக வலது முழங்காலில் கையை பொருத்தியிருந்தனர்.
செங்கு ஹெனான் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையில் வைத்திய பேச்சாளர் ஹோ ஜயென்க்ஸி இது தொடர்பாக குறிப்பிடுகையில்
'அவள் இங்கு வந்தபோது கை முற்றாக துண்டிக்கப்பட்டு அச்சமூட்டும் நிலையில் இருந்தது. தற்போது அச்சிறுமியின் கை மீண்டும் பொருத்தப்பட்டுவிட்டது.
இப்போது மிங் லீயினால் மீண்டும் தனது மணிக்கட்டுப் பகுதியை அசைக்க முடியும். அக் கையில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுகிறது.
எனினும் லீயிற்கு அடுத்த வருடம் இன்னும் இரண்டு சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டிய தேவையுள்ளது. ஒன்று அவளது கைகளின் சீரான செயற்பாட்டிற்கும் மற்றையது அவளது காயத் தழும்புகளை அகற்றுவதற்கு பிளாஸ்திக் சத்திரசிகிச்சையும் செய்ய வேண்டியுள்ளது' என்றார்.
ஆனால் வைத்தியர் ஹோ இது தொடர்பாக குறிப்பிடுகையில் 'சத்திர சிகிச்சையின் மற்றும் உடற்கூற்று சிகிச்சையின்பின் அவள் கையின் மூலம் பல செயல்களை செய்ய முடியும். எந்தளவுக்கு அவளின் கை இயல்பு நிலையை அடையும் எனத் தெரியாது. ஆனால் வாகனமொன்றை செலுத்துதல் உட்பட பல செயல்களை மேற்கொள்ள முடியுமாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025