Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 20 , மு.ப. 07:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வேயில் பொலிஸ் உத்தியோகஸ்தராக பணியாற்றுவதற்கு விரும்பிய மொடல் அழகியான கெத்தரின் அஷிமாவின் விண்ணப்பம் பொலிஸ் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷிமா அதிக கவரச்சியான உடலை கொண்டிருப்பதும் நிர்வாணமாக போஸ்கொடுத்ததுமே இதற்குக் காரணங்களாம்.
28 வயதான கெத்தரின், தாதியாக தொழில் புரிவதுடன் பகுதி நேர மொடலாகவும் பணியாற்றுகிறார். அவர் பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் பொலிஸ் அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர்.
அழகான வளைவுகள் கொண்ட பெண்ணான கெத்தரினின் உடற்திடநிலை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் சார்பானதாக அமைந்தன. ஆனால் அவர் இறுதி நேர்முகத் தேர்வில் கலந்துக்கொண்டபோது, அவர் நிர்வாண மொடலாக பணியாற்றியமை குறித்து தேர்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பியபின் அவரை நிராகரித்துவிட்டனர்.
'நான் பரீட்சைகளில் அதிக புள்ளிகளுடன் சித்தியடைந்துவிட்டேன். ஆனால் அவர்கள் எனது மொடலிங் தொழில் தீவிர வலதுசாரி அமைப்பில் அங்கம் வகிப்பதுபோலானது என்று கூறினார்.
இது உண்மையில் மோசமான அரசியல்தனமான கருத்தாகும்' என்று உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். இவர் விலங்கு பாதுகாப்பு அமைப்பான பெட்டா(PETA) வின் பிரசாரங்களில் ஈடுபட்டதாக கூறுகிறார்.
இத்தீர்மானத்திற்கு எதிராக கெத்தரின் போராடுவதாக அவரின் சட்டத்தரணி ஜேன் கிறிஸ்டியன் கூறியுள்ளார்.
எனினும் கெத்தரின் தேர்வு செய்யப்படாமைக்கு அவரின் மொடலிங் தொழில் காரணமல்ல என பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். வேலை ஊக்கம், பொலிஸாரின் பணி குறித்த விளக்கம், பொது அறிவு என்பன குறைவாக இருந்தமையாலேயே அவர் நீக்கப்பட்டதாக மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் நேர்முகத் தேர்வுக் குழுவிலிருந்த பெண் அதிகாரியொருவர் எனது நிர்வாண புகைப்படமொன்றை முகத்துக்கு நேரே காட்டியபோது தனக்கு இந்த வேலை கிடைக்காது என தான் உணர்ந்துகொண்டதாக கூறுகிறார் கெத்தரின்.
'அழகான உடல் இருந்தால் பொலிஸ் உத்தியோகஸ்தராக பணியாற்றமுடியாது என பொலிஸார் சிலர் எண்ணுவது மோசமானது. மொடலாக இருப்பதில் நான் வெட்கப்படவில்லை. அந்த புகைப்படங்களில் நான் பிரச்சினை எதையும் காணவில்லை. அந்த பெண் அதிகாரி பொறாமை கொண்டிருந்திருப்பார் போலும்' எனவும் கெத்தரின் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025