2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

சீன அதிகாரிகளை கதிகலக்கும் நிர்வாண திருமண அல்பங்கள்

Super User   / 2010 நவம்பர் 18 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் திருமணம் செய்யும் தம்பதிகள் பலர் நிர்வாண கோலத்தில் போஸ்கொடுத்து, திருமண அல்பங்களை தயாரித்து வருவது குறித்து சீன அதிகாரிகள் கதிகலங்கியுள்ளனர்.


சீனாவில், திருமண வைபவத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே திருமண அல்பங்களை தயாரித்துவிடும் வழக்கம் உள்ளது.  சில தசாப்தங்களாக மேற்கத்தேய பாணி ஆடைகளுடன் திருமண அல்பங்களுக்கான புகைப்படங்களுக்கு மணமக்கள் போஸ்கொடுத்து வந்தனர்.


ஆனால் தற்போது மணமக்கள் சிலர் எதுவும் வேண்டாம் என நிர்வாண கோலத்தில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கின்றனராம். இந்த வழக்கம் படிபடியாக அதிகரித்து வருகிறது.


ஆதாம்- ஏவாள், தேவதைகள், புராதன கிரேக்க கடவுள்கள் ஆகிய தொனிப்பொருள்களில் இந்த அல்பங்கள் தயாரிக்கப்பட்டன. சில அல்பங்கள் மென் பாலியல் படங்களின் அடிப்படையிலும் தயாரிக்கப்பட்டனவாம்.


இந்நிலையில், சீன அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் சீன புகைப்படக் கலைஞர்கள் சங்கம் பதறியடித்துக்கொண்டு இந்த புதிய வழக்கத்தை தடை செய்துள்ளது.
இப்புகைப்படங்கள் அமைப்பு ரீதியான திருமணத்தின் தாற்பரியத்திற்கு முரணானது என மேற்படி சங்கத்தின் தலைவர் ஹீ லின் கூறியுள்ளார்.
'திருமணம் என்பது புனிதமான சடங்கு. அது மதிக்கப்பட வேண்டுமென நாம் விரும்புகிறோம்' என அவர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 19 November 2010 09:19 PM

    அவர்களது கலாச்சாரத்துக்குச் சரிதான்!
    இதில் சீனர்களை விட ஜப்பானியர் ஒரு படி மேல். அவர்கள் ஒரு தம்பதி அல்ல, பல தம்பதியினர் சகிதம் இணைந்து album புகைப்படங்கள் எடுத்துக்கொள்வார்களாம்!
    மேற்கில் பிரபலங்கள் உள்பட அதை இணைய தளங்களுக்கு அனுப்பி சம்பாதிக்கின்றார்களே!
    அதை என்ன சொல்வது?
    திருமணத்துக்கு முன் பெண்ணின் நிர்வாண புகைப்படம் கேட்டால் அவர்கள் வழங்க தயங்குவதும் இல்லையாம்!
    பதிலுக்கு இவர்களும் கேட்பார்கள்!
    நம்நாட்டில் சிறை செல்ல வேண்டியது வரும்!
    ஒரு பெண்ணை கற்பழித்து அதை இணையதளத்தில் போட்டதால் வந்த வினை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .