Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 16 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளின் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக சிறைச்சாலையில் சூரியகுளியலுக்கான படுக்கை வசிதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சேற்றுநீரில் குளிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மொஸ்கோவிலுள்ள புட்டிர்கா விளக்கமறியல் சிறைச்சாலையின் தலைமையதிகாரி டெலியிட்னிகோவ் இது தொடர்பாக கூறுகையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைகைதிகள் உறவினர்களுடன் உரையாடுவதற்காக ஸ்கைப் வசதிகளும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சிறைகைதிகளின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக அல்ட்ரா சவுண்ட் சிஸ்டமும் ஏற்படுத்தப்படவுள்ளது.
ரஷ்யா சிறைச்சாலையில் அளவுக்திகமான சிறைகைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான மருத்துவ வசதிகள் மோசமாக இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், 'நாங்கள் சிறைசாலைகளுக்கு மருத்துவ வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். சூரிய படுக்கை வசதிகளையும் அமைத்துக் கொடுப்போம் என்று டெலியிட்னிகோவ் வானொலி பேட்டியொன்றில் கூறியிருக்கின்றார்.
'சூரிய படுக்கைகள் இவ்வருட இறுதிக்குள் அமைத்துக்கொடுக்கப்படும். ஆனால் கைதிகள் அவற்றை பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அத்துடன் அவற்றுக்கு கட்டணம் அறவிடப்படும்' என டெலியிட்னிகோவ் மேலும் தெரிவித்துள்ளர்.
புட்டிர்கா சிறைச்சாலையில் குறிப்பிடத்தக்க முக்கிய பிரமுகர்கள் பலர் இருந்துள்ளனர். எழுத்தாளர்களான அலெக்ஸான்டர் சோல்ஹெனிஸ்டின் மற்றும் ஹிசாக் பாபெல் மற்றும் அடொல்ப் ஹிட்லரின் மருமகன் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025