Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 14 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண்ணொருவர் மரக்கறிகள் மற்றும் பழங்களை வாங்கியபோது உரிய தொகையைவிட அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. குறித்த மரக்கறிகள் மற்றும் பழங்கள் நிறுக்கப்பட்ட தராசு நிறையை அதிகமாக காட்டியுள்ளதால் இவ்வாறு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த கோளாறுக்கு என்ன காரணம் என ஆராய்ந்துப் பார்த்தபோது எதிர்பாராத வித்தியாசமான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சுப்பர் மார்க்கெட்டின் விற்பனை உதவியாளரான பெண்ணின் மார்பங்கள் தராசை அழுத்திக்கொண்டிருந்தமையினாலேயே மரக்கறிகளினதும் பழங்களினதும் எடை அதிகமாக காட்டப்பட்டுள்ளதாம்.
பிரிட்டனின் சனல் ஐலண்டின் கூட்டுறுவு நிறுவனத்தின் தலைவர் ஜிம் ஹோப்லே இது தொடர்பாக குறிப்பிடுகையில் 'குறித்த உதவியாளர் தவறுதலாக 5 ஸ்ரேலிங் பவுண்களை அதிகமாக வசூலித்துவிட்டார். தற்போது அந்தப்பணம் திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
'உண்மையில் இது துரதிஷ்டவசமாக நேர்ந்த விடயமாகும். அந்த பரிதாபகரமான விற்பனையாளர் பெண் இச்சம்பவத்தால் இழிவுப்படுத்தப்பட்டுவிட்டார். ஆனால் வாடிக்கையாளர் சரியாக அதை எமது கவனத்திற்கு கொண்டு வந்தார். அச்சம்பவம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டது. நான் சம்பந்தப்பட்ட நபருக்காக மிகவும் வருந்துகின்றேன். அப்பெண் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.
நாங்கள் பொருட்களை பொருத்தமான வகையில் நிறுக்க வேண்டும் என்ற நிறை மற்றும் அளவுகள் குறித்த சட்டவிதிகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.
நான் இது குறித்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். நான் இதை நேரடியாக கவனித்து வருகிறேன். இங்கு பணியாற்றும் பெண்களில் சிலர் சிரித்துவிட்ட போதிலும் அந்தப் பிரச்சினையை நானே கையாளத் தீர்மானித்தேன்' எனவும் ஹோப்லே தெரிவித்துள்ளார்.
nnassm Monday, 15 November 2010 03:34 AM
அளவை நிறுவையை நமது நாட்டில் எப்படி கையாளுகின்றார்கள் என்பதை சற்று யோசித்துதான் பாருங்களேன்.
Reply : 0 0
xlntgson Monday, 15 November 2010 08:41 PM
இதைப் போல் இன்னொரு செய்தி: 'உனது தனங்கள் பெரிதாக இருக்கின்றன,அதனால் எங்கள் வியாபாரம் கெடுகிறது', என்று சொன்ன முதலாளிக்கு எதிராக செக்ஸ்d iscrimination பாகுபாடு வழக்கு போட்டிருக்கும் பெண்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025