2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

வாடிக்கையாளரின் முதுகில் ஆணுறுப்பை ஓவியமாக வரைந்த பச்சை குத்தும் கலைஞர் நெருக்கடியில்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 30 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ட்ரகன் உருவத்தை பச்சைக் குத்திக்கொள்ள விரும்பிய இளைஞரின் முதுகில் அவருக்குத் தெரியாமல் 40 சென்ரிமீற்றர் நீளமான ஆணுறுப்பை வரைந்த, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பச்சைக்குத்தும் கலைஞர் ஒருவர் சட்டநடவடிக்கையை எதிர்நோக்குகிறார்.

21 வயது வயதான இந்த நபர் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வாளர் போல் மெல்கம் இது குறித்து தெரிவிக்கையில் 'பச்சை குத்திக்கொள்ள விரும்பிய  25 வயதுடைய இளைஞன் பச்சைக் குத்துபவரின் வீட்டிற்குச் சென்று உரையாடிக்கொண்டிருந்தபோது பச்சை குத்துவது தொடர்பான விடயமும் அதில் இடம்பெற்றது.

பச்சைக் குத்திக்கொள்ள விரும்பிய இளைஞன் முதலில் தனக்கு ' யின் அன்ட் யாங் ' சின்னத்தையும்  ட்ரகனின் உருவத்தையும் பச்சையாக குத்துமாறு கேட்டுள்ளார்.

பச்சைக்குத்துபவர் இளைஞனின் முதுகில் பச்சைக் குத்துவதற்கு ஆரம்பித்தார். அங்கிருந்த இன்னொருவர் மேற்படி குத்துவதை அவதானித்து, பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது என்று உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார்.

பச்சை குத்தி முடிந்ததும் வெயிலில் திரிய வேண்டாம் எனவும் சில நாட்களுக்கு  முதுகை மற்றவர்களுக்கு காட்ட வேண்டாம்  எனவும் பச்சை குத்துபவர் கூறியுள்ளார்.

பச்சைக் குத்திக் கொண்ட நபர்  வீட்டிற்குச் சென்று தனது  துணைவியிடம் தான் பச்சைக் குத்திக்கொண்டதை காட்டியுள்ளார். அப்பெண் நீ விரும்பியதுதான் இங்கு பச்சையாக குத்தப்பட்டுள்ளது என்று நான் நினைக்கவில்லை' என்று கூறினாராம்.

அப்போதுதான் மேற்படி இளைஞனுக்கு தனது முதுகில் இப்படி பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அத்துடன் ' நான் ஓரின சேர்க்கையாளர் ' எனவும் எழுத்துப்பிழைகளுடன் பச்சையாக குத்தப்பட்டிருந்ததாம்.

அதையடுத்து பாதிக்கப்பட்டவர் பொலிஸில் புகார்செய்தார்.  இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 31 October 2010 08:41 PM

    வினோதமான வழக்கு தான்!
    பச்சைகுத்துகின்றவர் இம்மாதிரியான செய்கை மூலம் தனது முட்டாள்தனத்தை காட்டினாரோ அல்லது யாரும் மெச்சுவார்கள் தனது தொழில் விரிவடையும் என்று நினைத்தாரோ?
    எப்படி நிரூபிப்பார், தவறு ஒன்று நடந்துவிட்டது என்று?
    இந்த ஆள் என்னிடம் வரவே இல்லை, நான் குத்தவே இல்லை என்று சாதிப்பாரோ?
    இந்த மாதிரி வழக்குகள் மேற்குலகில் சர்வசாதாரணம்!
    இங்கே நியாயமான சில வழக்குகள் தொடரப்படுவதுமில்லை. தொடரப்பட்டாலும் முடிவு காண்பதுமில்லை. சாட்சி இல்லை என்றோ சாட்சி இறந்துவிட்டார் என்றோ மூடப்பட்டும்விடும்.
    சாட்சி கொலை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .