Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகு ராணிப்போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்ற யுவதியொருவர் முடிசூட்டப்பட்டபோது, ஏற்கெனவே தான் ஆபாசப்படங்களில் தோன்றியிருந்ததை ஒப்புக்கொண்டதால் அழகுராணிப் பட்டத்தை இழந்துள்ளார்.
செக் குடியரசின் சாஸ் நகரில் பியர் நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் பியர் அழகுராணிப் போட்டி நடைபெற்றது. இதில் 20 வயதான ஜானா கதேராவ்கோவா என்ற பெண் முதலிடம் பெற்றார்.
போட்டியின் முடிவில் கதேராவ்கோவாவுக்கு முடிசூடப்பட்டபோது அவரின் இத்தாலிய மொழித் திறமையையும் நடுவர்கள் பாராட்டினர்.
அப்பாராட்டுக்குப் பதிலளிக்கும் முகமாக கதேராவ்கோவா 'ஓ.. நான் இத்தாலியில் அதிக காலத்தை செலவழித்துள்ளேன். நான் அங்கு துகிலிரி நடனமாதுவாக பணியாற்றினேன். சஞ்சிகையொன்றிற்கு நிர்வாணகோலத்துடன் போஸ் கொடுத்துள்ளேன். அத்துடன் நான் தொலைக்காட்சியொன்றில் பாலுணர்வைத் தூண்டக்கூடிய வகையில் காலநிலை அறிவிப்பாளராகத் தோன்றினேன்' என்றார்.
அவ்வளவுதான் நடுவர்கள் திகைத்துப்போய், அப்போட்டி முடிவை இரத்துச் செய்துவிட்டனர்.
போட்டி ஏற்பாட்டாளர் பீட்டர் சிமெக் இது தொடர்பாக குறிப்பிடுகையில் "இது மிகவும் தெளிவான விடயம். எங்களது விதிகளின்படி, யாராவது விருப்பத்துடன் ஆபாசப்படங்களில் நடித்திருந்ததால் அவர்கள் இப்போட்டியில் பங்குபற்ற தடைசெய்யப்படுவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு கெட்ரோவோகா பதிலளிக்கையில் "இத்தீர்மானம் உண்மையில் முட்டாள்தனமானது. அவர்கள் இதனை என்னிடம் ஆரம்பத்திலேயே கேட்டிருக்க வேண்டும். மாறாக முடிசூட்டும்போது கேட்டிருக்கக்கூடாது" எனக் கூறியுள்ளார்.
Cyclone Monday, 08 November 2010 02:02 AM
யோவ் என்னையா இது கொடுமை சாமியோவ்! காலநிலை அறிவிப்பாளர் ஏன்யா பாலுணர்வை தூண்டும் விதத்தில் வரவேண்டும். ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னம்மோ நடக்குது. ஒரு பணிவான விண்ணப்பம்! நம்ம ஊரு காலநிலை அறிவிப்பு அம்மணிகள் கொஞ்சம் மனசு வைக்கணும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025