2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

ஆசிரியையின் அதிக கவர்ச்சியால் பாடசாலையிலிருந்து மாணவர்களை வாபஸ் பெறும் பெற்றோர்கள்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இத்தாலி பாடசாலையொன்றில் ஆசிரியை அதிக கவர்ச்சியாக இருப்பதால் அப்பாடசாலையிலிருந்து மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் வாபஸ்பெற்றுக் கொண்டிருக்கின்றனராம்.

இலியானா டெக்கோனெலி வயது 28 என்ற ஆசிரியையே இவ்வாறு கவர்ச்சியால் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்துள்ளதாக குற்றம் விமர்சிக்கப்பட்டுள்ளார்.


இவர் கல்வியில் 3 பட்டங்களைப் பெற்றவர். ஆனால் முன்னாள் மொடல் அழகியான அவரின் ஆபாச படங்கள் ஒளிப்பதிவு அடங்கிய விடயங்களை அவர் இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ளார்.


அதன் பெறுபேறாக அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்ற விதத்தில் அவர் அதிக கவர்ச்சியாக இருப்பதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

ஒருவர் தமது மகளை அந்த பாடசாலையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

ஆனால், புகழ்பெற்ற சான் கார்லோ கத்தோலிக்க உயர் பாடசாலையின் தலைமையாசிரியரும் வேறு சில பெற்றோர்களும் - குறிப்பாக தந்தையர்கள் - மேற்படி ஆசிரியைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பிராந்திய அழகுராணிப் போட்டியில் வெற்றியீட்டிய டெக்கோனெலி தேசிய ரீதியான போட்டியில் தோல்வியுற்றபின் ஆசிரியையாக பணியாற்றத் தொடங்கினார்.

தாய் ஒருவர் அந்த தலைமையாசிரியருக்கு அந்த ஆசிரியை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து இந்த சர்ச்சை ஆரம்பமாகியது.

இவ்விவகாரம் பிரதமர் சில்வியோ  பேர்லுஸ்கோனியின் குடும்பத்திற்குச் சொந்தமான பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக வெளியாகியது.

இது தொடர்பாக டெக்கோனெலி கூறுகையில், "நான் இளமைக்காலத்தில் அதிக அழகுடன் இருந்தபோது, மொடலாக பணியாற்றினேன். கடந்த 3 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நான் எந்தப் பிரச்சினையிலும் சம்பந்தப்படவில்லை. பாடசாலை நிர்வாகம் எனக்கு ஆதரவளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • xlntgson Sunday, 24 October 2010 09:02 PM

    ஆசிரியத்தொழிலுக்கு வந்தது வினை!
    நல்ல ஆசிரியர்கள் என்ன உடை உடுத்துகிறார்கள் என்பதெல்லாம் சர்ச்சை ஆகுமா?
    நன்றாக உடுத்திக்கொண்டு இருந்தவர்கள் லீலைகளில் ஈடுபடவில்லையா? உடை, ஆசை தூண்டும் என்றால் உடை இன்றி இருந்தால் தான் ஆசை வராமலிருக்கும் என்று கூறும் காம சித்தர்கள் திகம்பர நாதர்கள் நிருவாணிகள் சைனர்களின் வலையில் தான் நாம் விழுவோம்!
    ஒருவருடைய பார்வையே ஒருவருக்கு தூண்டுதலாக இருக்குமாயின் கண்களை குத்தி விட உத்தரவிடுவதா?
    மூடியதால் தான் நீ அழகாய் இருக்கின்றாய் என்னும் கவி வரிகள், என்ன கருத்தை சொல்கின்றன?

    Reply : 0       0

    Nafar Tuesday, 26 October 2010 04:30 PM

    மேலே கருத்து சொன்னவர் என்ன சொல்ல வருகிறார்? அவர் போல் கருத்து சொல்லுபவர்கள் இன்னும் இருக்கிறர்களா?

    Reply : 0       0

    xlntgson Tuesday, 26 October 2010 08:45 PM

    எவ்வாறான ஆடை ஆசிரியருக்கு பொருத்தமான ஆடை என்று மேலே கருத்துச்சொன்னவரை கேட்கிறேன்!
    முகம் மூடிய ஆடைகளை சில நாடுகளில் தடை செய்திருக்கின்றார்கள்!
    இந்தியாவில் சில பல்கலை கழகங்களில் சேலை அணிவதையும் சில பல்கலை கழகங்களில் பைஜாமாவையும் இன்னும் சில பல்கலைகழகங்களில் சேலையை தவிர எல்லாவற்றையும் தடை செய்திருக்கின்றார்கள். குட்டைபாவாடை தான் அணிய வேண்டும் என்று சில பள்ளிக்கூடங்களில் நிர்ப்பந்திக்கவும் செய்கின்றனர்!
    விளங்குகிறதா, nafar? சில காலம் முன் இலங்கையில் அவ்வாறான பிரச்சினையை நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?

    Reply : 0       0

    naslim Tuesday, 26 October 2010 09:39 PM

    ஆம் ஒரு மனிதனுக்கு மெருகூட்டுவதில் அவனது ஆடை முக்கிய பங்கை வகிக்கிறது. எனவேதான் ஆடை இல்லாமல் இருக்கும் பொது அசிங்கம் என்று சொல்கின்றோம் அதனால் ஆடை அந்த அசிங்கத்தை மறைக்கும் விதமாக இருக்கட்டும். ஆசையை தூண்டும் விதமாக் இல்லாமல் இருக்கட்டும்

    Reply : 0       0

    xlntgson Wednesday, 27 October 2010 08:49 PM

    நன்றி naslim. நான் நபாருக்கு (nafar) கொடுத்த பதில் போதாதோ என்று நினைத்தேன்
    திகம்பரம் என்ற சொல்லை நான் அகராதியில் பார்த்து போட்டேன். nudist என்னும் ஆங்கில சொல்லுக்கு மாற்றாகவே அதை பயன்படுத்தி இருக்கின்றேன்.
    யாரையும் அது தனிப்பட்ட முறையில் குறிக்கவில்லை நிர்வாணிகளான இவர்கள் அமெ. ஐரோப்பிய நாடுகளில் புரியும் லீலைகளை நீங்கள் இதே இணையத்தின் ஊடாக பார்த்திருப்பீர்கள்! ஒபாமா முன் தோன்றுவது, ஒரு கப்பலுக்கு ஆட்களை ஏற்றுவது போன்ற பல செய்திகள்.
    இதில் ஒரே பொருள்தான் கையாளப்படுகிறது:
    ஆடையால் மனிதர் ஏமாறுவராம்!

    Reply : 0       0

    Nafar Saturday, 06 November 2010 08:53 PM

    நீங்கள் இருவரும் பொதுவான கருத்தை சொல்லிகிரிர்கள், ஆனால் நான் கேட்கிறேன் பாடசாலைகளில் எப்படியான ஆடைகளிலும் செல்லலாம் என்று சொல்லுகிறிர்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .