Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேர்பியாவில் உள்ள பாடசாலை மாணவனான திமித்திரிஜ் மிட்ரோவிக்கை பார்த்து அவனது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பிரமித்துப் போயுள்ளனர். காரணம், அவன் ஒருநாள் உறக்கத்திலிருந்து எழுந்து திடீரென ஆங்கில மொழியில் சிறப்பாக பேச ஆரம்பித்துள்ளான். ஆனால் அவனுக்கு ஆங்கிலத்தில் ஒருவார்த்தையேனும் இதுவரை கற்றுக்கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமித்திரிஜ்ஜுன் அன்னை டிரக்னா குறிப்பிடுகையில், நிஸ் நகரில் உள்ள தனது வீட்டில் தனது மகன் 3 வயதாக இருக்கும்போது, ஒரு நாள் காலையில் எழுந்து சரளமாக துல்லியமான ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கியதாகக் கூறியுள்ளார்.
திமித்திரிஜ்ஜுக்கு தற்போது 11 வயது. அவனது குடும்பத்தில் அவன் மட்டுமே சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுகிறான். அவனது நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருவாராலும் அவனது நீண்ட ஆங்கில உரையாடலை புரிந்துக்கொள்ள முடியவில்லையாம்.
'திமித்திரிஜ்ஜுக்கு 3 வயது இருக்கும் போது ஒரு நாள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் என்னுடன் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்தான். எனக்கு சிறிது ஆங்கிலம் தெரியும் என்பதால் அவன் கூறியவற்றில் சிலவற்றை என்னால் உணர்ந்துக்கொள்ள முடிந்தது. ஆனால் அவன் மிக நன்றாக ஆங்கிலத்தில் உரையாடியதால் அவன் என்ன கூறுகிறான் என்பதை விளங்கிக்கொள்ள மொழிபெயர்ப்பாளர் ஒருவரை அழைத்து அவன் கூறுவதை என்னிடம் மொழிபெயர்த்துக் கூறும்படி கூறினேன்' என அவனது அன்னை விளக்கினார்.
அதே நேரம் திமித்ரிஜ்ஜூக்கு 5 வயதாக இருக்கும் போது ஹரி பொட்டர் நாவல்களை வாசித்து அவனது நண்பர்களுக்கு அக்கதைகளை கூற ஆரம்பித்தான். தற்போது அவன் அவனது தாய்மொழியை அரிதாகவே பேசி வருகிறான்.
மருத்துவ நிபுணர்கள் பலரும் திமித்ரிஜ்ஜீன் திடீர் ஆங்கில மொழியாற்றல் குறித்து வியப்புத் தெரிவித்துள்ளனர்.
நிஸ் நகரில் உள்ள பல்கலைகழகத்தின் ஆங்கில மொழி விரிவுரையாளரான டெட்ஜனா பௌனோவிக் குறிப்பிடுகையில் 'அது ஆச்சரியமானது. நாங்கள் ஒரு மணித்தியாலம் அவனுடன் ஆங்கிலத்தில் உரையாடினோம். அவன் எங்களைவிட சிறப்பாக ஆங்கிலம் பேசுகிறான்' எனத் தெரிவித்துள்ளார்.
Fahim Tuesday, 19 October 2010 12:23 AM
ஆச்சரியமான செய்தி. எனினும், மருத்துவ சோதனை என்ற பெயரில் அவனைப் பிய்த்தெடுத்துவிடாமல் இருந்தால் சரி.
Reply : 0 0
xlntgson Tuesday, 19 October 2010 10:28 PM
ஏதாவது மறுபிறவி அது இது என்று கதை விடவோ, பெரிய போடாக போடுகின்றீர்கள்? அது=ஆவி; இது=குலதெய்வம். படியாமல் ஒரு மொழியை பேச இயலும் என்று நான் நம்பவில்லை. படித்திருந்தாலும் கூட சிலருக்கு பேச தைரியம் வருவதில்லையே! அவ்வாறாக இருக்கும் போது ஏதோ ஒரு சக்தி கனவில் வந்து படிப்பித்தது என்றால் கதையா விடுகிறார்கள்! எல்லாம் நம்பக்கூடிய கதையா ஜெயின் பேய்க்கதையா?
Reply : 0 0
Nafar Tuesday, 26 October 2010 04:33 PM
இறைவனால் முடியாதது எதுவும் இல்லை
Reply : 0 0
xlntgson Saturday, 30 October 2010 08:23 PM
நன்றி nafar, நான் எனது மூட நம்பிக்கைக்கு எதிரான அனைத்து கருத்துகளையும் வாபஸ் வாங்கிக்கொள்கின்றேன்.
படிக்காமல் பாஸ் ஆகலாம் நேர்த்திக்கடன் வைத்துக்கொள்ளுங்கள்!
உங்களது தெய்வ குல தெய்வத்தை நினைத்து கொண்டு போங்கள் போதும்!
'ஒட்டகத்தை கட்டிவைத்து கொண்டு தொழுகையில் ஈடுபடுங்கள்; ஒட்டகத்தை தொலைத்து விட்டு இறைவனை குறைகூறாதீர்கள்', என்பது மூட நம்பிக்கையா?
கையை காலை, சிந்திக்கும் மனதை கொடுத்தவனும் அவன் தானே, சிந்திக்காமலிருக்க நாம் ஏன் படிக்க வேண்டும்?
எல்லாம் தெய்வீக சக்தியில் நமக்கு தெளிவாகலாமே,
என்ன?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025