2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

மதுபோதையில் மற்றொருவீட்டின் குளியலறையில் குளித்த நபர்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 17 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபரொருவர் மதுபோதையில் தனது வீடென நினைத்து பெண்ணொருவர் தனியாக வசித்து வந்த அயல் வீடொன்றுக்குச் சென்று அங்கிருந்த குளியலறையின் சவரில் குளித்துள்ளார்.

அவ்வீட்டில் வசிக்கும் பெண்,  வீட்டின் கீழ் தளத்தில் உள்ள குளியலறையில் திடீரென ஒருவர் குளிக்கும் சத்தத்தை கேட்டு அச்சமடைந்துள்ளார்.

அவர் உடனே பொலிஸாருக்கு அறிவித்ததபின் குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாக உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் மிகவும் மனம் வருந்துபவராக காணப்பட்டார் என பொலிஸ் அதிகாரி டேனியல் செஹான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செஹான் தெரிவிக்கையில் '42 வயதுடைய அந்த மனிதர், அதிகமாக மது அருந்தியதால் தனது வீட்டிற்குச் செல்லும் வழியை தவறியிருக்கிறார்.

திடீரென வீடொன்றை கண்டபின்  நேராக குளியலறைக்குச் சென்று குளித்துள்ளார்' எனக் கூறினார்.

பொலிஸார் வந்த போது, அந்த மனிதர் உடைகளை அணிந்துக்கொண்டு 34 வயதுடைய அந்தப் பெண்ணின் வீட்டு வராந்தாவில் அமர்ந்திருந்நதார்.

அவர் தனது தவறை உணர்ந்து பலமுறை பொலிஸாரிடமும் குறித்த பெண்ணிடமும் மன்னிப்புக் கோரினாராம்.
 


You May Also Like

  Comments - 0

  • ki Friday, 05 November 2010 07:47 PM

    இப்போ என்ன இப்போ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .