2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

நிர்வாண கப்பல் சுற்றுலாவுக்கு ஆட்கள் தேடும் நிறுவனம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனைச் சேர்ந்த சுற்றுலா முகவர் நிறுவனமொன்று 07 நாட்கள் நிர்வாண கோலத்துடன் உல்லாசமாக கப்பல் பயணம் செய்வதற்கு 22 பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

கடல் ,ஆறு  போன்றவற்றில்  முதலாவது நிர்வாண கப்பல் பயணம்  2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என ஈவாட்டர்வேய்ஸ் எனும் மேற்படி நிறுவனம் அறிவித்துள்ளது.

குரோஷியாவில் காதல் தீவு என்று வர்ணிக்கப்படும் 'ரப்' தீவு மற்றும் ஸடார் தீவுக்கும் இப்பயணம் மேற்கொள்ளப்படும். இதற்கான கட்டணம் 500 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

'குரோஷியாவில் பல நிர்வாண கடற்கரைகள் உள்ளன. அத்துடன் 'இயற்கைத்துவ விடுமுறைகளும் பிரபலமானவை. இது பெரிய அனுபவமாக இருக்கும்' என அந்நிறுவனத்தின் பெண் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தாளர்.

பயணிகள்  நீந்தும் போதும் சூரியக்குளியல் செய்யும் போதும் ஆடைகளில்லாமல் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் உணவு நேரத்தில் அவர்கள் ஆடைகள் அணிந்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகள் பலர் இதில் பங்குபற்றுவர் என எதிபார்ப்பதாகவும் ஆனால் ஜேர்மனியர்கள் அதிகமாக இருப்பர் என எதிர்பார்க்கிறோம்.  ஏனென்றால் அவர்களிலேயே நிர்வாண விரும்பிகளான இயற்கைத்துவ வாதிகள் அதிகம் எனவும் அந்நிறுவம் கூறியுள்ளது.

தமது அதிகமான வாடிக்கையாளர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும்  அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

 


 


You May Also Like

  Comments - 0

  • Shadhir Saturday, 16 October 2010 10:46 PM

    இது என்னே கொடுமை சார் ?????
    சுற்றுலாவின் போது ஆடைகளுக்கான செலெவினை குறைக்கவா இது ??????

    Reply : 0       0

    haseen Sunday, 17 October 2010 04:31 PM

    தற்கால மனிதன் கற்கால மனிதனாக மாற துடிக்கும் முனைப்பு ...மறைத்தலில் அழகை கண்டவன் மறைத்தலை மறைக்க முயலும் மேதா விலாசம் ...என்னவென்று சொல்வது ....நெஞ்சு பொறுக்குதில்லையே .....

    Reply : 0       0

    HIJAS Sunday, 17 October 2010 06:40 PM

    இலங்கை இல் இருந்து ஆட்கள் வேண்டும் என்றால் ப்ளீஸ் கோல் மீ.

    Reply : 0       0

    xlntgson Sunday, 17 October 2010 08:54 PM

    ஹிஜாசை தவிர மற்ற எல்லோரும் என்னையும் சேர்த்து பின் தங்கிவிடுவோம். ஆனால் ஹிஜாஸ் அதில் பயணம் செய்தாலும் குளிர்கிறது என்று போர்த்திக்கொள்ள பார்த்தால் கடலில் தூக்கி எறிந்து விடுவார்கள். என்ன ஹிஜாஸ் விருப்பமா?

    Reply : 0       0

    sri Monday, 18 October 2010 02:08 AM

    மூடு வந்துடுச்சுன்னா என்ன பண்ணுவாங்க....?

    Reply : 0       0

    Fahim Monday, 18 October 2010 12:08 PM

    இதுவெல்லாம் ஒரு செய்தி. சீ...!

    Reply : 0       0

    ilham Monday, 18 October 2010 05:46 PM

    என்ன உலகமடா இது? இப்படி ஒரு சுற்றுலா சி.......

    Reply : 0       0

    Nokia Saturday, 23 October 2010 06:16 PM

    போயும் போயும் இப்படி ஒரு சுற்றுலவா ??, உற்றார் உறவினரும் கூடவா போகின்றார்கள் ?????, சகிக்க முடியலையா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .