2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

விவசாயப் பெண்களின் கவர்ச்சிக் கலண்டர்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆஸ்திரியாவில் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் கலண்டர் ஒன்றுக்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.
இப் பெண்கள் அனைவரும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த அழகிகள். சமூக நல நிதியம் ஒன்றுக்கு நிதி சேகரிப்பதற்காக மேற்படி கலண்டர்களுக்கு இவர்கள் போஸ் கொடுத்துள்ளனர்.

தற்போது ஆஸ்திரியாவில் இக் கவர்ச்சிமிக்க கலெண்டர்கள்  வேகமாக விற்கப்பட்டு வருகின்றன. அதனால் அவற்றின் கையிருப்பு விரைவாக குறைந்துவருகிறது என கடை உரிமையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் என்றால் பழமைத் தன்மையானவர்கள் என்ற எண்ணத்தை மாற்றுவதற்காக இந்த கலண்டருக்கு போஸ் கொடுத்ததாக மொடல் அழகி ஒருவர் கூறியுள்ளார்.

'விவசாய கிராமங்களை சேர்ந்தவர்கள் என்பதால் நாங்கள் பின்தங்கிய,  பழமை தன்மையானவர்கள் என்று மக்கள் நினைக்கக் கூடும். நாங்கள் இப்போது பெஷனாகிவிட்டோம் என்பதை காட்டுவதற்கு விரும்புகின்றோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரிய இளம் விவசாயிகளின் சங்கத்தின்  தலைவர் எலிஸபெத் கொஸ்டிங்கர் தெரிவிக்கையில் 'கவர்ச்சி மிகுந்த இளம் விவசாயப் பெண்களது கலெண்டர்கள் ஆஸ்திரிய விவசாயிகள்  மொடர்னாகி விட்டார்கள் என்பதை காட்டுவதற்கு உதவும்' என தெரிவித்துள்ளார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .