Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில், கர்ப்பமுற்றிருந்த ஒரு பெண்ணை கொன்றதுடன் அப்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை கர்பப்பையிலிருந்து வெட்டியெடுத்த பெண்ணொருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த கோரினா ரொபர்ட் வயது 27 எனும் பெண்ணே இவ்வாறான கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். ஸ்னைவ்லி என்ற 8 மாத கர்ப்பிணியை அவரது இல்லத்தில் வைத்து கோரினா ரொபர்ட், மடிக்கக் கூடிய இராணுவக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன்பின் அவர் ஸ்னைவ்லியின் வயிற்றிலிருந்து அந்தக் குழந்தையையும் பிரித்தெடுத்துள்ளார்.
அந்த ஆண் குழந்தையின் உயிர் அத்தாயின் கர்ப்பப்பையிலே பிரிந்திருந்தது.
இக்கொலைக் குறித்த தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டபின் பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்தனர். அதன்போது கோரினா ரொபர்டின் காதலன் யான் சுபின், அக் குழந்தையை உயிர்ப்பிப்பதற்கு கடுமையாக முயற்சித்துக் கொண்டிருப்பதையும் இரத்த வெள்ளத்தையும் பொலிஸார் கண்டனர்.
10 வயதிற்குக் கீழ்பட்ட இரண்டு பிள்ளைகளைக் கொண்ட தாயான கோரினா, மேற்படி சிசுவை மருத்துவர்களிடம் கொண்டு சென்று அது தனது குழந்தை என தெரிவித்துள்ளார்.
எனினும் மருத்துவ பரிசோதனையின் போது அப்பெண் குழந்தை பிரசவிக்கவில்லை என்பது தெரியவந்தது.
இக்கொலை இடம்பெறுவதற்கு 04 மாதங்களுக்கு முன்பு ரொபர்ட், தான் கருவுற்றிருப்பதாகவும் அந்தக் குழந்தைக்காக தள்ளுவண்டியொன்றை வாங்கப்போவதாகவும் சஞ்சிகை ஒன்றிறிடம் கூறியிருந்தார்.
அதன்பின்பே அவர் கர்ப்பிணியான ஸ்னைவ்லியை கொலை செய்துள்ளார்.
xlntgson Saturday, 09 October 2010 09:28 PM
இம்மாதிரியானதும் உறவு முறையை பாதிக்கும் செய்திகளையும் வெளியிடாதிருக்க விநயமாகக் கேட்டுக்கொள்கின்றேன். மிக மிக அருவருப்பாக இருக்கிறது. ஆபாசப்படங்கள் தேவலை. பாடசாலை பிள்ளைகள் செய்திகள் பார்க்க பெற்றோர் தடை விதிக்க வரும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago