Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபூர்வ இளம்சிவப்பு நீர்யானையொன்றை கென்யாவில் வைத்து பிரித்தானிய புகைப்படப்பிடிப்பாளர்கள் படம்பிடித்துள்ளனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த சகோதரர்களும் வனவிலங்கு படக் கலைஞர்களுமான வில் லூகாஸ் மற்றும் பர்ட் லூகாஸ் இப்படங்களை கடந்த வாரம் கென்யாவில் உள்ள மாஸி மாராவில் வைத்து படம் பிடித்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்குச் சென்றபோது இந்த இளம்சிவப்பு நீர்யானை குறித்த தகவலை கேள்விப்பட்டு அதை தேடிச் சென்றதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களது பயண வழிக்காட்டி இந்த அரிய வகை நீர்யானை குறித்து மற்றொரு பயண வழிகாட்டி மூலம் அறிந்ததாக எம்மிடம் கூறியிருந்தார். ஆனால் அவர் இவ்வின மிருகங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிடவில்லை. அதேவேளை அவர் எங்களுடன் பயணிக்கவுமில்லை என்று 26 வயதடைய வில் லூகாஸ் தெரிவித்துள்ளார்.
'நாங்கள் ஒரு மந்தமான காலை வேலையில் மாரா ஆற்றின் கரையோரத்தில் காலை உணவை உண்பதற்காக எங்களது பயணத்தை இடைநிறுத்தினோம். அப்போது திடீரென ஆற்றங்கரையில் சிவப்பு நீர்யானை தென்பட்டது. நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எமது கமெராக்களை எடுத்துக் கொண்டு அவ்விடத்தை நோக்கி ஓடினோம்' என அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago