Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் கடத்தும் கும்பலொன்று தப்பிச் செல்வதற்கு உதவிப் புரிந்த குற்றச்சாட்டில் கிளியொன்றை கொலம்பிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாரான்குயிலா நகரில் போதைப் பொருள் கடத்தும் கும்பலொன்று மறைந்திருந்த இடத்தை சுமார் 300 பொலிஸார் சுற்றி வளைத்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொலம்பிய செய்தி நாளிதழான 'எல் ஹெரால்டோ ' தெரிவித்துள்ளது.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்.
எப்படியிருப்பினும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய அனைவரும் வீட்டிலிருந்த இந்தக் கிளியினால் தப்பித்துள்ளனனர்.
லோரன்ஸோ என்ற மேற்படி கிளி 'ஓடு ஓடு அல்லது பூனை உண்ணப்போகிறது' என்று கூறி எச்சரித்ததால் போதைப் பொருள் கடத்தல் காரர்கள் அனைவருமே உஷாரடைந்து தப்பியோடியுள்ளனர்.
பொலிஸ் தம்மை தேடி வரும்போது அந்த வசனத்தை கூறுவதற்கு லோரன்ஸா என்ற இந்தக் கிளிக்கு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நன்கு பயிற்சியளித்துள்ளனர்.
மேற்படி கிளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மிருக உரிமைகள் அமைப்பொன்றிடம் கையளிக்கப்பட்டது.
அந்தப் பறவை காரில் கொண்டு செல்லப்படும்போதும் 'ஒடு ஓடு' என்று கூறிக்கொண்டே வந்தது என்று பொலிஸார் மேற்படி நாளிதழக்குத் தெரிவித்துள்ளார்.
jivasutha Sunday, 19 September 2010 07:44 PM
கிளியின் மதிநுட்பம் வியத்தக்கது. போதைப்பொருள் கும்பலை காப்பாற்றுவதற்காக ஐந்தறிவு படைத்த கிளி செய்த உதவி வரவேற்கத்தக்கதாகும். ஆனால், இந்தக் குணம் ஆறறிவு படைத்த தற்போதைய மனித ஜென்மத்திடம் இல்லை.
Reply : 0 0
nuah Wednesday, 29 September 2010 08:45 PM
போதை வஸ்து கும்பலை காப்பாற்றவேண்டுமா, என்ன கூறுகின்றீர்? மிருகங்களை குற்றச்செயல்களுக்காக பயன்படுத்துவது பெரும் குற்றம். அதே நேரம் வாலில்லா குரங்கு, நாய் போன்ற மிருகங்களை இராணுவத்துக்கும் பொலீசுக்கும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்திக்கொள்ள இயலும். இம்மாதிரியான கலைகளை சட்டப்படியாக பாதுகாப்புப் படைகளில் சேர்ந்து படித்துக்கொண்டு பின்னர் அதிலிருந்து கொண்டு அல்லது விலகி துஷ்பிரயோகம் பண்ணுகிறவர்கள் அதிகம். அதாவது நம்மை காக்க கொடுக்கும் பயிற்சியே நம்மை அழிக்க உதவுகிறது என்று சொன்னால் மிகை இல்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago