2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

பிராவை கழற்ற நிர்ப்பந்திக்கப்படுவதாக பெண் சட்டத்தரணிகள் புகார்

Kogilavani   / 2010 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

altபெல்ஜியத்திலுள்ள பெண் சட்டத்தரணிகள், தாம்  தங்களது கட்சிக்காரர்களைப் பார்வையிடுவதற்காக சிறைச்சாலைக்குச் செல்லும்போது தமது பிராவை கழற்றிவிட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவதாக புகாரிட்டுள்ளனர்.

'ஹசெல்ட்' சிறைச்சாலைக்குச் செல்பவர்கள், உலோக சோதனைக் கருவி ஒலியெழுப்பினால் கண்டிப்பாக உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாடையிலுள்ள உலோகங்கள், உலோக சோதனைக் கருவிகளை ஒலியெழுப்பச் செய்தால் உள்ளாடையை கழற்றிய பின்னரே சிறைக்குச் செல்ல பெண் சட்டத்தரணிகள் அனுமதிக்கப்படுகின்றனராம்.

ஜோசப் ரோவிஸ் எனும் சட்டத்தரணி இது தொடர்பாக குறிப்பிடுகையில் 'அந்த எச்சரிக்கை கருவி மிக இலகுவாக ஒலி எழுப்பத் தொடங்கிவிடுகிறது. சிறைக்காவலர்களோ விதிமுறைகளை எழுத்துககு எழுத்தாக கடைப்பிடிக்க முயற்சிக்கின்றனர். எனவே பெண் சட்டத்தரணிகள் தமது உள்ளாடையை கழற்றிவிட்டுச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட குறிப்பொன்றில் 'சோதனைக் கருவிகள் அனைத்தும் ஏற்கெனவே பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதில் தவறுகள் காணப்படவில்லை. யாரேனும் அக்கருவிகளை ஒலிக்கச் செய்தால் அவர்கள் உள்ளே செல்ல முடியாது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பல பெண் சட்டத்தரணிகள் புகார் தெரிவித்துள்ளதால், இது குறித்து அதிகாரிகள் மீள் பரிசீலணை செய்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .