Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்லிடத் தொலைப்பேசியில் வேகமாக டைப் செய்வதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மெலிஸா தொம்ஸன் எனும் அப்பெண், முழு வசனமொன்றை டைப் செய்வதற்கு 25.94 விநாடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.
செல்லிடத் தொலைபேசியில் வேகமாக டைப் செய்வதை அளவிடுவதற்காக "The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human"என்ற வசனத்தை கின்னஸ் நிறுவனம் தெரிவு செய்து வைத்துள்ளது.
இவ்வசனத்தை மெலிஸா தொம்ஸன் 29.95 விநாடிகளில் டைப் செய்து முடித்துள்ளார்.
தொம்ஸனுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க்லின் பேஜ் என்பவர் இந்த வசனத்தை 35.54 விநாடிகளில் டைப் செய்து சாதனை படைத்திருந்தார்.
மெலிஸா தனது காதலர் கிறிஸுக்கு தினமும் 40 அல்லது 50 குறுந்தகவல்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால், அவர்கள் ஒன்றாக வசிக்கத் தொடங்கியபின் அதிக குறுந்தகவலை அனுப்புவதில்லையாம்.
எனினும், சம்சுங் நிறுவனம் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சிக்குமாறு அழைத்தபோது, அவர் வேகமாக டைப் செய்வதற்கேற்ப தனது விரல்களைப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.
ஏனையோரைவிட மிக அதிக வித்தியாசத்தில் வேகமாக டைப் செய்து சாதனை படைத்துள்ளார் மெலிஸா.
புதிய உலக சாதனைக்கான சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்திடமிருந்து வரும்வரை காத்திருக்கின்றார் அவர்.
xlntgson Friday, 27 August 2010 09:42 PM
நல்ல போட்டி, அவசரமாக செய்தி அனுப்பும் தேவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புரிந்து கொள்ளக்கூடிய மாதிரி இருக்க வேண்டும் புரியாத புதிராக இருந்தால் குரல் அழைப்புகள் எவ்வளவுதான் தொல்லை பேசியாக இருந்தாலும் பேசி ஆகவேண்டும். இப்போதெல்லாம் குரல் அழைப்புகளை பதிவு செய்து/ பதிவுஒன்றை வைக்குமாறு* கோரும் ஒலி நாடாக்கள் தொல்லை கொடுக்கின்றன. அழைப்பவர் யார் என்று அறிந்து கொள்ளும் வசதி இருப்பதால் நாம் தொடர்பு கொள்ள முயல்பவர் வேண்டுமென்றே தவிர்க்கின்றாரோ என சந்தேகம் இருந்தால் குறுந்தகவல் அனுப்ப வசதி அவசியம்*.
Reply : 0 0
xlntgson Saturday, 28 August 2010 10:03 PM
குறுந்தகவல் அனுப்பும் வசதியே இல்லாமலோ அவ்வாறான வசதியை செயலிழக்க செய்வதோ சரி இல்லை.குறுந்தகவல் அனுப்ப தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கொடுத்து அதிகமாக அடைத்துக்கொண்டிருக்கும் செய்திகளை அழிக்கவேண்டும்.செய்திகள் நிறைந்து போனாலும் குறுந்தகவல் வராது. தொலைபேசி அழைப்பையும் குறுந்தகவலையும் மறுக்கும் ஒருவரோடு எப்படியும் தொடர்பு கொள்ள இயலாது. ஏன் தான் இவர்கள் எல்லாம் கையடக்கதொலைபேசி ஒன்றை கையில்வைத்து திரிகின்றார்களோ, பெருமைக்கோ? குறுந்தகவல் தொலைபேசி போதாதென்று இப்போது ஈமெயில் விளம்பரங்களும் தொல்லை ஆகிவிட்டன!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago