2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

உயிரைக் காத்த பெண் சத்திரசிகிச்சை நிபுணருக்கு கொலை மிரட்டல்

Super User   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனது உயிரைக் காப்பாற்றிய அழகு மிகுந்த பெண் சத்திரசிகிச்சை நிபுணர் மீது காதல்கொண்டு  பின்னர் அந்நிபுணருக்கு கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளார்.

ஹு ஹான் எனும் இந்நபர், தனக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்ட மோ ஷுஸென் எனும் நிபுணரை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதை கூறியபோது அதற்கு ஷுஸென் மறுப்புத் தெரிவித்ததனால் அப்பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது.


'தயவு செய்து என்னை திருமணம் செய்துகொள்ளவும். இல்லாவிட்டால் நான் உன்னை கொல்வேன்' என இரத்தத்தால் எழுதப்பட்ட பதாகையொன்றை தாங்கியவாறு ஷுஸெனின் மருத்துவமனைக்கு வெளியே ஹான் நின்றுகொண்டிருந்ததாக சத்திரசிகிச்சை நிபுணர் ஷுஸென்,  பொலிஸில் புகாரிட்டுள்ளார்.


அந்த பதாகையில் ஷுஸெனின் புகைப்படத்துடன் இதயம் ஒன்றும் கூரிய கத்தி ஒன்றிலிருந்து இரத்தத்துளிகள் விழுவது போன்றும் வரையப்பட்டிருந்தது.


'சத்திரசிகிச்சையிலிருந்து நான் விழிப்படைந்தபோது, நான் ஒரு தேவதையால் காப்பாற்றப்பட்டுள்ளேன் என்பதை கண்டறிந்தேன். நான் அவளிடம்  என்னை திருமணம் செய்துக் கொள் என்று நேரடியாக கேட்டேன். ஆனால், அவள் என்னை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு அவளது பதில் தேவை. அதனால்தான் இந்த திட்டத்தைத் தீட்டினேன் என பொலிஸாரிடம் ஹான் கூறியுள்ளார்.


எவ்வாறெனினும், மென்மையான மனதுகொண்ட ஷுஸென், அந்நபருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க எண்ணவில்லை.
'அவரின் உயிரைக் காப்பாற்றியமை குறித்து நான் மகிழ்ச்சியடைவதாக அவரிடம் தெரிவித்தேன். ஆனால், வழக்கமான மருத்துவர் - நோயாளி உறவுக்கு அப்பால் எமக்கிடையில் உறவேதும் கிடையாது' என சத்திரசிகிச்சை நிபுணர் ஷுஸென் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .