2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் ஆபாச வீடியோ ஒளிபரப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் நாடாளுமன்றத்தில் மிக ஆபாசமான பாலியல் வீடியோக் காட்சிகள் திரையிட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தின் தகவல் சேவை திரையில்  நேற்று திங்கட்கிழமை அரசியல் நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுவதை எதிர்பார்த்து காத்திருந்தபோது ஆபாச பாலியல் வீடியோ ஒளிபரப்பட்டதைப் பார்த்த ஊடகவியலாளர்களும் அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த ஆபாசக்காட்சிகள் வெளிப்படையாக இணையத் தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் பயன்படுத்தும் திரையில்  இந்த வீடியோ 15 நிமிட நேரம் ஒளிபரப்பப்பட்டது. அதன்பின்னரே  பாதுகாவலர்கள் அதை நிறுத்தியதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆபாசக் காட்சிகள் எவ்வாறு திரையில் தோன்றியது என்பது தெரியவில்லை. ஆனால் அதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவர் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது அந்நாட்டு ஜனாதிபதியான சுசிலோ பாம்பாங் யுதோயோனாவிற்கு  தர்ம சங்கடமான நிலையை தோற்றுவித்துள்ளது. அவர் அண்மையில்  இணையத்தளங்களில் ஆபாசப் படங்களை கடுமையாக கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளை பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Wednesday, 04 August 2010 09:08 PM

    பார்த்தால் தானே தெரியும் ஆபாசமா இல்லையா என்று,என்ன? பார்க்காமலே கூறிவிட முடியுமா ஆபாசமா இல்லையா என்று? பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாரும் வயதுக்கு வந்தவர்கள் தானே, யுதயானோ வேண்டுமானால் கண்ணை மூடிக்கொள்ளலாம். யார் யார் இதை பெரிய திரையில்/சின்னத்திரையில் பார்க்க விரும்புகின்றீர்கள் என்று வாக்குக்கு விடலாம். மாறிவரும் உலகில் தீர்வு காணப்படாத ஒரு பிரச்சினையாக இது உருவாகி வருகிறது மிகச்சிறிய கெமரா, ஆள்கிறது உலகை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .