2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

குட்டைப் பாவாடைக்குத் தடை

Super User   / 2010 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனின் உள்ளுராட்சி அலுவலகமொன்றில் பணியாற்றும் பெண்கள் பலருக்கு குட்டை பாவாடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டிய பணிலுள்ள பெண்கள் மிகக் குட்டையான பாவாடை அணிவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு இணங்கிச் செயற்படாத பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சௌத்தாம்ப்டன் சிற்றி கவுன்ஸிலின் சிறுவர் சேவை திணைக்களத்தில் பணியாற்றும் சுமார் 400 ஊழியர்கள் கடமைக்கு வரும்போது அணியும் ஆடைகள் குறித்த சுற்றுநிருபங்களைப் பெற்றுள்ளதாக பிரித்தானிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
 

தொழிற்சார் உத்தியோகஸ்தர் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும் சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மதிப்பளிக்கும் நோக்குடனும் பொருத்தமான ஆடை அணியுமாறு அங்கு பணியாற்றும் ஆண்களும் பெண்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

ஆண்கள் கொலர் வைத்த அல்லது போலோ ஷேர்ட் மற்றும் பெல்ட் சகிதம் பருத்தி அல்லது காக்கி துணியிலான காற்சட்டை அணியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெண்கள் 'நியாயமான அளவுகொண்ட' பாவாடை போன்றவற்றை அணியலாம் எனவும் ஆனால் குட்டை பாவாடை அணியக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
 

ஆனால், சில பெண்கள் இத்தடைக்கு எதிராக போராடப்போவதாகக் கூறியுள்ளனர். "நாம் அணிந்திருக்கும் பாவாடையின் நீளம் எவ்வளவு என டேப் வைத்து அளக்கப்போகிறார்களா?" என ஒரு பெண் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Monday, 02 August 2010 08:27 PM

    ஆச்சரியமாக இருக்கிறதே. இதை செய்திகளின் பக்கத்தில் பார்த்தபோது இது தலிபான்களின் உத்தரவு என்று நினைத்தேன். இது நவீன நாகரிகங்களின் தலைநகர்களில் ஒன்றில் என்றதும் எனது ஆச்சரியம் அதிகரிக்காமலில்லை. குழந்தைகளின் குடும்பங்களின் நன்மை என்று இனிமேல் தலிபான் அறிக்கையிட்டால் அவர்களுக்கும் நன்மையாக இருக்கும். மதத்தின் பெயரால் செய்வதனாலோ வெள்ளைக்காரர்களுக்கு கோபம்.இங்கேயும் அமைச்சர் ஒருவர் குட்டைப்பாவாடை அணியும் பெண்களைத்தான் டெங்கு கொசு கடிக்கிறது என்று சொல்லி கேலிக்குள்ளானார்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .