2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

நாயை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய இலங்கையர் கனடாவில் கைது

A.P.Mathan   / 2010 ஜூலை 29 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 51 வயதுடைய அஞ்சலோ அபயவிக்ரம என்பவர் நாயை பலாத்காரபடுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இவரது வழக்கு நேற்று புதன்கிழமை கனடா நீதிமன்றில் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாயின் உறுப்பில் பலாத்காரமாக ஆணுறையினை அணிவித்து சித்திரவதை செய்ததால் அந்நாய் பரிதாபமாக துடிதுடித்த சம்பவத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அந்நபர் கைதுசெய்யப்பட்டார். மிருகவதை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபரின் விசாரணை நேற்று நடைபெற்றபோது, தான் வேண்டுமென்று அந்நாயை சித்திரவதை செய்யவில்லை எனவும் அந்நாய் அடிக்கடி தனது வீட்டில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காகவே தான் அப்படி ஆணுறையினை அந்நாய்க்கு மாட்டிவிட்டதாகவும் சந்தேகநபர் மன்றில் தெரிவித்திருக்கிறார். மேலதிக விசாரணைகள் மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நபர் கடந்த 2007ஆம் ஆண்டு தனது நண்பருடன் கத்திக்குத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கும் இலக்காகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0

  • sheen Friday, 30 July 2010 09:34 PM

    நாய்த்தொல்லை பெரும் தொல்லைதான். அதற்கு இப்படி ஒரு சித்திரவதையா? மனித விளையாட்டு அப்பாவி மிருகங்களுக்கு பெரும் வதை. பூணைக்கு சந்தோஷம் எலிக்கோ பிராணன் போகிறது என்பார்கள். இப்போது விசேட தொலைபேசி எண் ஒன்றுக்கு அழைத்து புகார் சொல்லலாம். அக்கம் பக்கம் இருக்கிறவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகிக்க வேண்டாமா? நல்ல அயலவர் கொள்கை இருந்தால் உலகில் பிரச்சினை எங்கே உருவாகப் போகிறது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .