Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெயினின் அரச குடும்பக் குழந்தைக்குச் சூட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர், 157 எழுத்துகள், 25 சொற்களைக் கொண்டுள்ளது.
அந்தப் பெண் குழந்தையின் பெயரைச் சட்டப்படி பதிவுசெய்வதற்குப் பெயரின் நீளத்தைக் குறைக்கவேண்டும் என ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'Sofia Fernanda Dolores Cayetana Teresa Angela de la Cruz Micaela del Santisimo Sacramento del Perpetuo Socorro de la Santisima Trinidad y de Todos Los Santos' என்ற பெயரைக் குழந்தைக்குச் சூட்ட தந்தை விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பெயர் சட்ட விதிமுறைகளை மீறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலஞ்சென்ற குடும்ப உறுப்பினர்கள், சமய வழிபாடுகளை அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்லாம் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குழந்தையின் ஞானஸ்நானம் இம்மாதம் நடைபெற்றது. அப்போது அழைக்கப்பட்ட பெயர் சட்டக் காரணங்களுக்காக மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
6 hours ago
8 hours ago