Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 1,500 கட்டாக்காலி நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதற்காக தன்னுடைய வீடு, தொழில் மற்றும் கார் என்பவற்றை இழந்துள்ளார்.
ஹா வென்ஜின் என்ற இப் பெண் இவற்றுக்காக தனது வர்த்தகத்தை விட்டுக்கொடுத்துள்ளதுடன் தனது வீடு, நகைகள், கார் என்பனவற்றை விற்று உத்தியோகபூர்வமற்ற நாய் மீட்பு நிலையமொன்றை நான்ஜிங்கில் டாங்குவன் பிரதேசத்தில் ஸ்தாபித்துள்ளார்.
'முதன் முதலில் எனது ஓய்வு நேரங்களிலே இவற்றை நான் வளர்க்கத் தொடங்கினேன். அதன்பின்பு என்னிடம் அதிகமான கைவிடப்பட்ட நாய்கள் வந்து குவிந்தன. நான் அவற்றுக்காக முழுநேரமும் வேலை செய்ய வேண்டியிருந்தது' என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அந்நாய்களை பராமரிப்பதற்காக 10 வேலையாட்களை இணைத்துக்கொண்டுள்ளார். அத்துடன் அவர் மேலும் இரண்டு உதவியாளர்களை 200 கைவிடப்பட்ட பூனைகள் வளர்க்கப்படும் பூனை வளர்ப்பு நிலையத்தில் சேர்த்துக்கொண்டுள்ளார்.
ஆனால் வென்ஜினின் திட்டங்களை உள்ளுராட்சி அலுவலர்கள் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் மேற்படி காணியை மீள் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக மீளப் பெற்றுக்கொண்ட போது இத்திட்டம் நெருக்கடிக்குள்ளானது.
'நான் புதிய இடத்தை தேட நேர்ந்தது. அவ்விடம் மனித நடமாட்டம் இல்லாத தூர பிரதேசத்திலும் இருக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் 1500 நாய்கள் அமைதியானவை அல்ல. மற்றும் அவ்விடம் மிகவும் மலிவான வாடகைக்குரியதாக இருக்கவேண்டும். ஏனெனில் நான் நன்கொடை மூலமே இந்நிலையங்களை நடத்துகிறேன்' என அப்பெண் கூறுகிறார்.
இறுதியாக ஹோவ்யூ கிராமத்தில் அவருக்கு மேற்படி நிலையங்களை அமைக்க இடம் கிடைத்துள்ளது. எனினும் பணத்திற்காக நன்கொடைகளை எதிர்பார்த்த வண்ணம் உள்ளார்.
நாளை 04 ஆம் திகதி அவர் இம்மிருகங்களை புதிய இடத்திற்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளார். நாய்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். பின்னர் அவ்வாகனங்களைக் கழுவுவதற்கும் தொண்டர்கள் முன்வருவார்கள் என தான் எதிர்பார்ப்பதாக வென்ஜின் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025