2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

15 வயது மாணவர்களுடன் தகாத உறவுகொண்டதை ஒப்புகொண்ட ஆசிரியை

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிரிட்டனில், ஆண்கள் பாடசாலையில் தொழில் புரியும் ஆசிரியை ஒருவர், 15 வயதுடைய இரு  மாணவர்களிடம் தகாத உறவுகொண்டதாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஹினா பட்டேல் எனும் வயது 37 வயதான இந்த ஆசிரியை சௌத்போர்ட் பிராந்தியத்திலுள்ள ஆண்கள்  உயர் பாடசாலையொன்றில் பணியாற்றினார்.

அப்பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயதான இரு மாணவர்களுடன் தனது வீட்டில் வைத்து முழுமையான பாலியல் உறவுகொண்டதாக அவர் லிவர்பூல் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் நேற்று ஒப்புக்கொண்டார்.

சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதன் மூலம் தனது பதவிநிலையின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக இரு குற்றச்சாட்டுகளில் ஹினா பட்டேல் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 1 முதல் மார்ச் 18 ஆம் திகதிவரையான காலத்தில் இக்குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாணவர்களது விபரங்கள் அவர்களது வயது காரணமாக வெளியிடப்படவில்லை.

மேற்படி பாடசாலையின் தலைமை ஆசிரியர் கெரி லோவ்ரிஜ் பட்டேல் இந்த வகையில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்தமை குறித்து தான் மிகவும் விசனமடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆரம்ப நிலையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து தான் ஆறுதல் அடைவதாகவும் தாம் விழிப்பு நிலையில் இருக்க வேண்;டியதன் அவசியத்தை இம்சம்பவம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹினா பட்டேல், தான் பணியாற்றிய முந்தைய பாடசாலையிலிருந்து சிறந்த சிபாரிசுகளுடன் இப்பாடசாலைக்கு வந்ததாகவும் கெரி லோவ்ரிட்ஜ் தெரிவித்தார்.

ஹினா பட்டேல் மீதான நீதிமன்றத் தீர்ப்பு நவம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 14 October 2010 09:31 PM

    ஆசிரியையான இவருக்கு ஆசிரியத் தொழில் இல்லாமல் போனால் என்ன செய்வாரோ, மசாஜ், மேல்பிடித்து விடும் தொழிலுக்கு போவாரோ?

    Reply : 0       0

    Kesa Kana Friday, 15 October 2010 12:52 AM

    அவ செய்முறை விளக்கமெல்ல குடுத்தவ...உதுக்கு போய் பெரிசா பீத்திக்கொண்டு நிக்கிறியள்!!!

    Reply : 0       0

    Alga Friday, 15 October 2010 05:55 AM

    குடுத்து வைச்ச பொடியல்

    Reply : 0       0

    k.nathan Saturday, 16 October 2010 02:52 PM

    உந்த செய்திகள் எதுக்கு எமது நாட்டுக்கு ?
    ஐடியா குடுகாதைங்கோ பத்திரிகையாளர்களே .

    Reply : 0       0

    azeem Saturday, 23 October 2010 12:02 AM

    ஒருசில ஆசிரியர்களால எல்லோருக்கும் கெட்ட பெயர்.

    Reply : 0       0

    Fanam Thursday, 25 November 2010 07:22 PM

    இது வெளிவந்த செய்தி, அவ்வளுவுதான். எவ்வளவோ நடக்கின்றன ஆனால் அவை எல்லாம் செய்திகளாக வெளிவருவதில்லை. அந்த நாடுகளில் இது சாதாரண விஷயம்...

    Reply : 0       0

    Kesavan Kanagarajah Friday, 08 July 2011 01:28 AM

    இது எல்லாம் மிகவும் சாதாரணமான நிகழ்வுகள் வெளிநாடுகளில்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .