2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

14 வயது சிறுவனுடன் தகாத உறவுகொண்ட பெண்ணுக்கு 7 வருட சிறை

Kogilavani   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பதினைந்து வயது சிறுவனுடன் பாலியல் உறவுகொண்ட குற்றத்திற்காக அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவருக்கு 7 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த என்ஜீ ஜென்கின்ஸ் என்ற பெண்ணுக்கே இத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் விளையாடப்படும் 'வேர்ல்ட் ஒவ் வோர்கிராப்ட்'  எனும் விளையாட்டின் ஊடாக குறித்த சிறுவனுடன் தொடர்பை ஏற்படுத்திய மேற்படி பெண், படிப்படியாக அவனுடனான உறவை வளர்த்துக்கொண்டு சென்றுள்ளார்.

அவர் கடந்த 2010 ஆம் ஆண்டு, காரொன்றினுள் வைத்து குறித்த சிறுவனுடன் பாலியல் உறவுக்கொண்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜென்கின்ஸ் சிறுவர் பாலியல் படங்களை பெற்றுக்கொண்ட குற்றசாட்டையும் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றில்  ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறுவனுடன் பாலியல் உறவுகொண்ட குற்றத்திற்காக அவருக்கு 87 மாத கால சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் நியூயோர்க்கை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 4,480 அமெரிக்க டொலர்களை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சிறுவனின் கையடக்கத் தொலைபேசிக்கு வெளிமாநில தொலைபேசி இலக்கத்திலிருந்து ஏராளமான அழைப்புகள் வந்தபோது சிறுவனின் பெற்றோர் அவதானிக்க தொடங்கினர்.

விசாரணையின்போது ஜென்கின்ஸின் தொலைபேசி இலக்கத்திற்கு அவரின் கோரிக்கையின் பேரில் அச்சிறுவன் அனுப்பிய பாலியல் படங்களையும் புலனாய்வுப்பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

சிறுவனின் தொலைபேசியை அவனின் பெற்றோர் துண்டித்தனர். ஆனாலும் ஜென்கின்ஸ் வேறு வழிகளில் தொடர்புகொண்டதுடன் அவனுக்காக புதிய தொலைபேசியையும் வாங்கிக் கொடுத்திருந்தார்.

ஜென்கின்ஸை உளவியல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவுப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • islam Thursday, 22 September 2011 06:37 PM

    culture is that. first change culture>>>>>>

    Reply : 0       0

    xlntgson Thursday, 22 September 2011 09:18 PM

    Islam writes? Probably if he is unmarried and she is also, she would have proposed!

    Reply : 0       0

    siraj Friday, 23 September 2011 04:16 AM

    இது அவங்களுக்கு சகஜமப்பா.

    Reply : 0       0

    sahir Friday, 23 September 2011 09:37 AM

    அமெரிக்காவில இப்படி சட்டம் சிரிப்பு வருது சிரிப்பு வருது siththakka.

    Reply : 0       0

    xlntgson Saturday, 24 September 2011 09:39 PM

    I make a pardon, before proposing, the age of marriage should be reduced to the age of maturity (!)

    Reply : 0       0

    s.f Saturday, 01 October 2011 03:41 PM

    சொன்ன வெக்கக் கேடு ,சொல்லாடி மானக்கேடு .இப்படியும் பெண்களா ?

    Reply : 0       0

    AMR RDA Wednesday, 19 October 2011 05:13 PM

    இளையதை இயன்றபடி வளைக்கலாம் என்ற எண்ணமாகும்.

    Reply : 0       0

    Fariz Friday, 30 December 2011 05:13 PM

    இது அவங்க கலாச்சாரம் அவங்களுக்கு இது எல்லாம் சகஜம் தானே எங்களுக்கு என்ன

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .