Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் 103 வயதில் பேஸ்புக் இணையத்தளத்தில் தீவிரமான செயற்பாட்டாளராக விளங்குகிறார். உலகில் மிக அதிக வயதான பேஸ்புக் பாவனையாளர் இவராவார்.
பெம்புரோக்ஷயர் பிராந்தியத்தின் டென்பி நகரைச் சேர்ந்த லிலியன் லோவ் என்ற பெண்ணே இவ்வாறு அதிக வயதான பேஸ்புக் பாவனையாளராக விளங்குகிறார்.
ஐபாட் ஓன்றை பயன்படுத்தி வரும் அவர் தினமும் தனது வாழ்வில் நடக்கும் விடயங்களை பேஸ்புக்கில் பதிவு செய்து வருகிறார்.
மற்றும் இந்த சமூக இணையத்தளத்தில் அவர் இருப்பதைக் கண்டு பலர் ஆச்சரியமடைகின்றனர்.
ஆனால், பேஸ்புக்கில் இணைந்திருப்பதன் மூலம் தனது 7 பேரப்பிள்ளைகள் மற்றும் 14 பூட்டப்பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது என லிலியன் லோவ் தெரிவித்துள்ளார்.
இவர் இன்னும் இரண்டு மாதங்களில் தனது 104 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தகக்து.
இதற்குமுன் அதிக வயதான பேஸ் புக் பாவனையாளராக விளங்கிய ' இவி பீன் ' என்பவர் கடந்த ஜூலை மாதம் காலமானார். அதையடுத்து லிலியன் லோவ் அதிக வயதுடைய பேஸ்புக் பாவணையாளராக விளங்குகிறார்.
எனினும் ' அதிக நேரத்தை கணினிகளுடன் செலவிடுவது வீண்விரயம். அந்த நேரத்தில் பயனுள்ள பல விடயங்களை செய்ய முடியும்' என்கிறார் லோவ்.
tamilsalafi.edicypages.com Thursday, 23 December 2010 04:11 AM
புத்திசாலி தனமாக தன்னை படைத்தவனை அறிந்து , நல்ல காரியங்களில் ஈடுபட்டார் என்றால் விமோசனம்.. இல்லை என்றால்
வேஸ்ட் ஐ புக் பண்ணி பேஸ் பண்ண முடியாமல் தவிப்பார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025