2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

10.10.10. ஆம் திகதி திருமணம் செய்ய 106 காதல் ஜோடிகள் தீர்மானம்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 09 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கும் அதிகமான காதல் ஜோடிகள் நாளைய தினம் திருமணம்  செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 10 ஆம் திகதியான நாளை விசேட தினம் என அவர்கள் கருதுகின்றனர்.  இத்தகைய தினம்  நூற்றாண்டுகளுக்கு ஒருதடவை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

106 காதல் ஜோடிகள் நாளை நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில்  திருமணப் பதிவு அலுவலகங்களில் திருமணம் பந்தத்தில் இணைந்து புதிய சாதனையை நிலைநாட்டவுள்ளனர். சிட்னியில் நியூகாசல் மற்றும் பரமாட்டா ஆகிய நகரங்களில் உள்ள அலுவலகங்களில் இத்திருமணப் பதிவுகள் நடைபெறும்.
 
10.10.10. ஆம் திகதியில் திருமணம் செய்யும் வாய்ப்பு நூறு வருடங்களுக்கு ஒரு தடவையே கிடைக்கும். 1856 ஆம் ஆண்டு நியூ சௌத் வேல்ஸ் திருமணப் பதிவு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாளை ஞாயிற்றுக்கிழமைதான் மிக அதிகமான வேலைப்பளு மிகுந்த நாளாக இருக்கும் என நியூசௌத் வேல்ஸ் சட்டமா அதிபர் ஜோன் ஹாட்சிஸ்டேர்ஜர்ஸ் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .