2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

10,000 அடி உயரத்தில் தம்பதியினர் தனிமையில் இரவை கழிப்பதற்கான வாய்ப்பு ஏலமிடப்படுகிறது

Kogilavani   / 2012 ஜூன் 28 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அல்ப்ஸ் மலைத்தொடரில் 10,000 அடி உயரத்தில் காதல் களிப்பூட்டும் சூழலலில் ஒரு நாள் இரவினை கழிப்பதற்கான வாய்ப்பு 'ஈ பே' இணையத்தளத்தின் மூலம் ஏலமிடப்பட்டுள்ளது.

வெற்றியாளர்கள் பனிப்பாறையின் மீதான படுக்கையில் நட்சத்திரங்களுக்கு கீழாக இரவை கழிக்க முடியும் .

ஆஸ்திரியாவின் சுற்றுலாத்துறை தலைவரான ரம்சௌ இது தொடர்பில் தெரிவிக்கையில், ஆடம்பர உணவுகள், மதுபான நிலையம் என்பவற்றை உள்ளடக்கியதாக இந்த இரவு அமையவுள்ளது என தெரிவித்துள்ளார்.

மறக்க முடியாத சாகசத்திற்கான வாய்ப்பை நாங்கள் இருவருக்கு வழங்கவுள்ளோம் என ஆஸ்திரிய சுற்றுலா அதிகார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

'நீங்கள் காதலில் வீழ்ந்துவிட்டால், உங்களது துணைக்கு ஆச்சர்யத்தை வழங்க விரும்பினால் இந்த இரவானது உண்மையில் மறக்க முடியாத இரவாக இருக்கும்.  இதில் ஏலத்தில் வெற்றி பெறுபவர்கள் இந்த பனி மலைத் தொடரில் யாராலும் தொந்தரவு செய்யப்படாத நிலையில் தமது உணர்வுகளை அனுபவிக்க முடியும்.

ஆகாயம் மற்றும் நட்சத்திரங்களுக்கு கீழ் உங்களை யாரும் பார்க்க முடியாது என மலைத்தொடர் வழிகாட்டி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஏலத்தின் மூலம் பெறப்படும் லாபமானது ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிற்கு வழங்கப்படவுள்ளது. மேற்படி இடத்தை வரலாற்று பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .