Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது 8 மாத குழந்தைக்காக போத்தல்களில் அடைத்து வைத்திருந்த 14.8 லீட்டர் தாய்ப்பாலை இலண்டன் ஹீத்ரூ விமான நிலைய அதிகாரிகள் குப்பையில் எறிந்தமைக்காக அமெரிக்க பெண்ணொருவர் ; தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த ஜெசிகா கோக்லீ மார்டினெஸ் என்ற பெண்ணே இவ்விபரீதத்தை எதிர்கொண்டுள்ளார். இவர் வேலையின் நிமித்தம் இலண்டனுக்கு சென்றுள்ளார். 2 குழந்தைகளின் தாயான அவர், தனது 8 மாத கைக்குழந்தையை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் தனது குழந்தைக்கு கொடுக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாய்ப்பாலை போத்தல்களில்; நிரப்பியுள்ளார். இப்படி அவர் 14.8 லீட்டர் தாய்ப்பாலை போத்தல்களில் நிரப்பியுள்ளார். 14.8 லீட்டார் தாய்ப்பாலுடன் அவர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு இருந்த அதிகாரிகளோ அதிகபட்சமாக 100 மில்லி லீட்டர் நீரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் என கூறி 14.8 லீட்டர் தாய்ப்பாலை குப்பையில் எறிந்துள்ளனர்.
தனது மகனின் 2 வார கால உணவு குப்பைக்கு போனதை பார்த்த ஜெசிகா, ஆத்திரம் அடைந்து அது குறித்து முகப்புத்தகத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
'ஹீத்ரூ விமான நிலைய இணையத்தளத்தில் திரவங்களை எடுத்துச் செல்வதற்கான விதிமுறைகள் போடப்பட்டுள்ளன. ஒரு பெண் தனது குழந்தையுடன் வந்தால் மட்டுமே பால் மற்றும் உணவை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்' என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் முகப்புத்தகத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago