Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
George / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடை மாற்றும் அறையில் உடைகளை மாட்டும் கொக்கிகளில் இரகசிய கமெரா பொருத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான இரகசிய கமெரா பயன்படுத்தப்படுவது தொடர்பில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்கள் உடை மாற்றும் அறைகளிலும் விடுதிகளிலும் இரகசிய கமெராவை கொண்டு அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
சுவர் கடிகாரங்கள், பேனா என பல்வேறு வடிவங்களில் இரகசிய கமெராக்கள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து விழிப்பு உணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோட் கொக்கிகளிலும் இரகசிய கமெராக்கள் பொருத்தப்படுவது தெரியவந்துள்ளது.
உடை மாற்றும் அறைகளில் உடைகளை கழட்டி மாட்டும் கொக்கிகளை யாரும் பெரிதாக சந்தேகப்பதில்லை. இதை பயன்படுத்திக்கொள்ளும் சில சமூக விரோதிகள் அதில் இரகசிய கமெராக்களை பொருத்தி அந்நியர்களின் அந்தரங்கங்களை கைப்பற்றிவிடுகிறார்கள்.
மேலும், இணையதளங்களிலும் இதுபோன்ற இரகசிய கமெராக்களை வாங்குவதற்கான வழிகளும் எளிய வகையில் இருக்கின்றன. வளரும் தொழில்நுட்பத்திடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, கூடுதல் அவதானம் அவசியம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
6 hours ago
21 Apr 2025
21 Apr 2025