2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தலை வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாத குழந்தை

Kogilavani   / 2013 ஏப்ரல் 17 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எட்டு மாத குழந்தை ஒன்று தலை வீக்கம் காரணமாக பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இந்தியா, வடகிழக்கு பகுதியை சேர்ந்த 'ரூனா பேகம்' என்று அழைக்கப்படும் இக்குழந்தையே இத்தகைய அரிய நோயினால் பாதிப்படைந்துள்ளது.
'ஹைட்ரோசிஃபலஸ்' என்ற நோயினால் பாதிப்படைந்துள்ள இக் குழந்தையின் தலை மூன்று தடவைகள் இவ்வாறு வீக்கமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரூனா பேகத்தின் தந்தை செங்கல் தொழிற்சாலையில் தொழில்புரிந்தாலும் அவரது நாளாந்த வறுமானம் போதாததாக காணப்படுகிறது.

இக்குழந்தை ஊனமாகிவிடும் அல்லது இறந்துவிடும் என்று முன்பு அறிவிக்கப்பட்டபோதும் தற்போது அக்குழந்தையை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனாலும், வறுமை காரணமாக குழந்தையை குணப்படுத்த முடியாமல் பெற்றோர் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





You May Also Like

  Comments - 0

  • தனபால் Thursday, 02 May 2013 04:41 AM

    இவர்களுக்கு உதவ வழி இருக்கிறதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .