Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 16 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவரின் கண்களில் இருந்த 6 சென்றிமீற்றர் நீளமான பிளாஸ்டிக் குச்சியொன்று 11 வருடங்களின்பின் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சி யேங் என்ற பெண் அண்மையில், தனது வலது கண்ணில் வலி அதிகமாக இருப்பதாக கூறி, சீனாவின் தென்மேற்கு பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெறுவதற்குச் சென்றார். தனது கண்ணிலுள்ள உண்மையான பிரச்சினை குறித்து அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
இது குறித்து வைத்தியர் ஹுவா ஸீ கூறுகையில், 'அவரது வலது கண் மிகவும் வீங்கியிருந்தது. நான் உடனடியாக கண்ணை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டுமென்று அப்பெண்ணிடம் கூறினேன். ஸ்கேன் செய்து பார்த்தப்போது அவரது வலது கண்ணிண் வலது புறத்தில் 6 சென்றிமீற்றர் அளவுடைய உடைந்த குச்சியொன்று இருந்தது' என தெரிவித்துள்ளார்.
அன்றைய தினமே அப்பெண்ணின் கண்ணில் இருந்த குச்சி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
11 வருடங்களுக்கு முன் தடுக்கி விழுந்ததாகவும் அப்போது உணவுமேசையில் முகம் அடிபட்டதாகவும் அப்பெண் நினைவுகூர்ந்துள்ளார்.
'அப்போது, வலது கண்ணில் காயம் ஏற்பட்டு உடனடியாக சிகிச்சை பெற்றதாக அவர் தெரிவித்தார். அதன்பின் கண் எதுவித பிரச்சினையுமின்றி குணமடைந்திருந்ததது' என அவர் கூறியுள்ளார்.
'அப்பெண் அதிஷ்டசாலி. கண்ணுக்கும் கற்குழிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே குச்சி ஊடுருவியதால் அப்பெண்ணின் பார்வை பாதிக்கப்படாமல் தப்பியுள்ளார்' என மருத்துவர் ஹுவா ஸு கூறியுள்ளார்.
risimb Sunday, 17 July 2011 09:11 PM
நம்பலாமா? வைத்தியர் ஹூ வா ஸூ விட்க்கு மட்டும்தான் கண் தெரிந்தது !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago