2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிறுமியின் சுவாசப்பையில் 5 செ.மீ. நீள அட்டை

Kogilavani   / 2014 மார்ச் 17 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


சத்திர சிகிச்சையொன்றில் சிறுமியொருவரின் சுவாசப்பையில் இருந்து 5 சென்றி மீற்றர் நீளமான அட்டையொன்று அகற்றப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் தென்மேற்கு பகுதி, ஸாடொங்கைச் சேர்ந்த 7 வயது சிறுமியின் சுவாசப்பையிலிருந்தே இவ்வாறு அட்டையொன்று அகற்றப்பட்டுள்ளது.
மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் இச்சிறுமியை குன்மங் என்ற சிறுவர் வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சிறுமியை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் சிறுமியின் சுவாசப்பையில் 5 சென்றி மீற்றர் நீளமான அட்டையொன்று இருப்பதை கண்டு அதர்ச்சியடைந்ததுடன் உடனடியாக சத்திர சிகிச்சைக்கூடாக அதனை அகற்றியுள்ளனர்.

'நான் எனது பிள்ளைக்கு ஜலதோஷம் ஏற்பட்டிருக்கும் என்றே எண்ணினேன். ஆனால் அட்டை உள்ளிருந்ததால்தான் இத்தகைய மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த அட்டை நீண்ட காலமாக தொண்டைக்குள்; இருந்திருக்குமென நான் நினைக்கிறேன்' என்று அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

'இவ்வட்டை சிறிதாக இருக்கும்போதே சிறுமியின் தொண்டைக்குள் சென்றிருக்க வேண்டும்' என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சிறுமி நீர்குழாயின் மூலமாக நோரடியாக நீர் அருந்தியதனால் அட்டை வாய்மூலம் தொண்டைக்குள் சென்றிருக்கலாம்' என்றும் மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .