Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 29 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் மின்னஞ்சலை அனுமதியின்றி திறந்து பார்த்ததற்காக 5 வருட சிறைதண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
33 வயதான லியோன வோல்கர் என்பவரே இவ்வாறு 5 வருடகால சிறைதண்டனையை எதிர்நோக்குகிறார்.
அவர் தனது மனைவியின் மீது சந்தேகம் கொண்டதால் அனுமதியினிற்றி மின்னஞ்சலை பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மிச்சிகன் மாநில வழக்குத் தொடுநர்கள், அடையாளத் திருட்டுகளைத் தடுக்கும் கணினி ஊடுருவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லியோன் வோல்கர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
லியேரின் மனைவி ஏற்கெனவே இரண்டுதடவை திருமணமாகி விவகாரத்து பெற்றவர். லியோன் வோல்கர் தனது மனைவி மீது சந்தேகம் கொண்டிருந்தார்.
தனது மனைவி கிளேராவுக்கு முன்னாள் கணவருடன் தொடர்பிருப்பதாக சந்தேகம் கொண்ட லியோன், தனது கணினி அறிவைப் பயன்படுத்தி, மனைவியின் அனுமதியின்றி அவரின் மின்னஞ்சலை பார்த்துள்ளார்.
அதன் மூலம், லியோன் சந்தேகித்தது போல அவரது மனைவிக்கு முன்னாள் கணவருடன் தொடர்பிருப்பதும் மனைவி தன்னை ஏமாற்றுவதும் தெரியவந்தது.
தனது மனைவியும் அவரின் முன்னாள் கணவரும் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களை தனது மகளின் கணவரிடம் லியோன் வழங்கினார்.
இந்நிலையில் தனது மின்னஞ்சல்கள் திறக்கப்பட்டிருப்பதை அறிந்த லியோன் வோல்கரின் மனைவி கிளேரா, பொலிஸாரிடம் புகார் செய்தார். அதையடுத்து கணினி ஊடுருவல் குற்றச்சாட்டில் லியோன் கைது செய்யப்பட்டார்.
தற்போது லியோனை கிளேரா விவாகரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
sham Thursday, 30 December 2010 02:01 AM
அடடடா .. ..பிரமாதம்.ம் ம் ம் ம் ம்
Reply : 0 0
xlntgson Thursday, 30 December 2010 10:11 PM
இதென்ன பிரமாதம், தன் மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினவனை கொன்ற சம்பவம் இலங்கையில் உண்டு!
(மனைவிமாரின் தொலைபேசியை எடுத்து பார்க்காத கணவனும் இல்லை; கணவன் தொலைபேசியை துருவாத மனைவியும் இங்கில்லை!)
அது சரி, கணவன் அறியக்கூடாத இரகசியம் என்ன மனைவிக்கு, ஹி...ஹி ...சும்மா ஒரு இதுக்குத்தான் கேட்டேன்!
மனைவி அறியாத இரகசியம் கணவனுக்கும்!
குடிகாரக் கணவன்மார் தனது வங்கி கணக்கை சுத்தம் செய்துவிட்டதாக புகார்கள் இருக்கும் போது இது ரொம்ப சகஜம்.
நிற்க, ஐந்து வருட சிறை அதிகமில்லை? அதுவரை தனியாக இருப்பரா?
மீண்டும் காதல்?
Reply : 0 0
Fahim Friday, 31 December 2010 03:29 AM
அவரை சிறைக்கு அனுப்புவது அநீதி. அவரது மனைவி மீது சந்தேகம் வந்ததால்தான் அவர் அதனைப் பார்த்துள்ளார். அவரது மனைவியைத்தான் சிறைக்கு அனுப்ப வேண்டும். அவள்தான் அவரை வாழ்க்கையில் ஏமாற்றியிருக்கிறாள்.
Reply : 0 0
sumi Saturday, 08 January 2011 12:40 PM
fahim அதுதான் அமெரிக்க நடை முறை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Apr 2025
25 Apr 2025