2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ராட்டிணம் திடீர் பழுது ; 5 மணித்தியாலம் பயணிகள் அந்தரத்தில்

Kogilavani   / 2011 ஜூலை 04 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ராட்டிணங்களில்  (ரோலர் கோஸ்டர்) பயணம் செய்வதற்கு சிலர் பயப்படுவர். மனிதர்களை தலைகீழாக பயணிக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் ராட்டினங்கள் திடீரென பாதியில் நின்றுவிட்டால் என்ன நடக்கும் என்ற யோசனையும் பலருக்கு ஏற்படுவதுண்டு.

ஆனால் உண்மையிலேயே வேகமாக சுற்றிக்கொண்டிருந்த ராட்டிணமொன்று திடீரென பழுதடைந்து இடையில் நின்றுவிடவே இதில் பயணித்த பலர் அந்தரத்தில்  5 மணித்தியாலங்கள் பரிதவித்து கிடந்த  சம்பவம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

ஸ்கொட்லாந்து, ஹமில்டனிற்கு அருகில் உள்ள உல்லாச பூங்காவிலே மேற்படிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையொன்று இளைஞர் ஒருவர் உட்பட 9 பேர் அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்த ராட்டிணம் பழுதடைந்தது. 5 மணித்தியாலங்களின் பின் இரவு 8.30 மணிக்கு தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் இவர்கள் மீட்கப்பட்டனர்.

இப் பூங்காவை நிர்வகிக்கும் எம் அன்ட் டி நிறுவனம்  'ஸ்கொட்லாந்தின் மிக அச்சமூட்டும் ராட்டிணம்' என இந்த ராட்டிணத்தை தனது இணையத்தளத்தில் வர்ணித்துள்ளது.  ஆனால் இந்த அளவுக்கு அச்சமூட்டும் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இப் பூங்காவில் இப்படியான சம்பவம் முதல் தடவையாக இடம்பெறவில்லை. கடந்த 2009 ஆம் ஆண்டு ராட்டிணமொன்று பழுதடைந்ததால் 40 அடி உயரத்தில் சிக்கிக் கொண்ட  6 பேர்  காப்பாற்றப்பட்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • Anban Tuesday, 05 July 2011 10:52 PM

    விளையாட்டு வினையாகிற்று

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .