2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பசுமையை வலியுறுத்தி மரம் ஏறிய பெண் 451 நாட்களின் பின் கீழிறங்கினார்

Kogilavani   / 2013 மார்ச் 11 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200 அடி உயரமான மரத்தின் உச்சியில் வாழ்ந்து வந்த பெண்ணொருவர் 451 நாட்களின் பின்னர்  மரத்திலிருந்து கீழிறங்கிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.

காடுகளை பாதுகாப்பது தொடர்பில் பிரசார செயற்பாட்டில் ஈடுபட்டு வந்த மிரன்டா கிப்சன் என்ற 31 வயது பெண்ணே இவ்வாறு 451 நாட்களின் பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார்.

இவர், அவுஸ்திரேலியா, டாஸ்மானியாஸ் பகுதியில் உள்ள 200 அடி உயரமான மரமொன்றில் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஏறிகொண்டு காடுகளை அழிப்பது தொடர்பிலான தனது எதிர்பை வெளிப்படுத்தி வந்தார்.

அன்று முதல் தொடர்ந்து 451 நாட்கள் இவரது பாதங்;கள் தரையை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இத்கைய போராட்டம் ஊடகங்களில் பரவலாக காண்பிக்கப்பட்டதுடன் ஏனைய சூழல் பாதுகாவலர்களும் இவரை பாராட்டினார்.

இறுதியாக இவரிடம்; பலர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து அண்மையில் இவர் மரத்திலிருந்து கீழே இறங்கினார்.

'மிரன்டா 451 நாட்களின் பின்னர் மரத்திலிருந்து கீழே இறங்கியது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. காடுகளை பாதுகாப்பது தொடர்பிலான அவரது போராட்டத்தை இனி அவர் தரையிலிருந்து தொடருவார்' என அவுஸத்திரேலியாவின் பசுமைவாதியான கிரிஸ்டினி மிலின் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • siva Monday, 23 September 2013 09:36 AM

    இந்த காலத்தில் இப்புடி ஒரு பொண்ணா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .