2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பல தடவைகள் மார்பகத்தை பெரிதாக்கிய தாயும் 4 மகள்களும்

Kogilavani   / 2012 ஜூலை 06 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்தைச் சேர்ந்த சாண்டல் மார்ஷல் என்பவரும், அவரது நான்கு மகள்களும் இதுவரை தங்களது மார்பகங்களை பெரிதாக்குவதற்காக 13 முறை சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளனர்.

தற்போது தங்களது ஐந்தாவது மகளது மார்பகத்தையும் பெரிதாக்குவதற்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

லண்டனைச் சேர்ந்தவர் சாண்டல் மார்ஷல் (53 வயது). இவருக்கு  எம்மா (30 வயது), ரிப்ளி (21 வயது), டெர்ரி (27 வயது), தாரா (26வயது) மற்றும் பிரிட்னி (14) என்ற  5  மகள்மார் உள்ளனர்.

இவர்களில் சாண்டலும் மூத்த மகள்கள் நால்வரும் மொத்தமாக 13 முறை சத்திரசிகிச்சை செய்து கொண்டதனூடாக தமது மார்பகங்களை பெரிதாக்கியுள்ளனர்.

இவர்களில் டெர்ரியும், தாராவும் பெரிய மார்பகத்துடன் வலம் வருகின்றார்கள். டெர்ரி தனது மார்பகத்தை பெரிதாக்க 3 முறையும் தாரா 2 முறையும் சத்திரசிகிச்சை செய்து கொண்டுள்ளனர்.

சாண்டல் 4 முறை சத்திரசிகிச்சை செய்துக்கொண்டுள்ளார். எம்மாவுக்கு 3 முறையும், ரிப்ளிக்கு ஒருமுறையும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

14 வயதான பிரிட்னி, தனக்கு மார்பக சத்திரசிகிச்சை மேற்கொள்ள விருப்பமில்லை எனக் கூறியுள்ளார்.

இது குறித்து சாண்டல் கூறுகையில், "எனது மகள்களுக்கும், எனக்கும் பெரிய மார்பகங்கள் இருப்பதை பார்க்கவே பெருமையாக, சந்தோஷமாக இருக்கிறது. இதை நாங்கள் விரும்புகிறோம். விரைவில் பிரிட்னியும் தனது சகோதரிகளைப் போலவே பெரிய மார்பகத்துக்கு மாறி விடுவாள்"எனத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Saturday, 07 July 2012 02:08 PM

    ஆஹா.. நல்லதொரு குடும்பம்..1

    Reply : 0       0

    smibrahim11@yahoo.co Saturday, 07 July 2012 03:49 PM

    நல்ல குடும்பம்

    Reply : 0       0

    Neethan Monday, 09 July 2012 08:05 AM

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். உலகம் கெட்டு போட்டு பாருங்கோ.

    Reply : 0       0

    sumukajan Tuesday, 10 July 2012 04:02 AM

    தாராள மனம்

    Reply : 0       0

    pasanga Tuesday, 17 July 2012 01:39 PM

    பெரும்பாலானவர்கள் இப்படித்தான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .