2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாலியல் சாதனம் உடலில் மாட்டிக்கொண்டதால் 36 மணித்தியாலங்கள் தவித்த வயோதிபர்

Kogilavani   / 2012 ஜூன் 12 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வயோதிபர் ஒருவர் பயன்படுத்திய பாலியல் சாதனமான வளையமொன்று அவரின் உடலில் மாட்டிக்கொண்டதால் அதிலிருந்து விடுபடுவதற்காக 36 மணித்தியாலங்கள் போராடி, இறுதியில் தீயணைப்புத்துறையினரின் உதவியை நாட வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளான சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

69 வயதான அந்நபர், வைத்தியசாலையொன்றை நாடினார். அங்கிருந்து அவர்,  மன்செஸ்டர் வடக்கு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவருக்கு என்ன செய்வதென மருத்துவர்களுக்கு புரியவில்லை.

இறுதியில் தீயணைப்புத்துறையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் அவ்வளையத்தை அவதானமாக வெட்டி அகற்றுவதற்கு தீர்மானித்தனர்.

மேற்படி வயோதிபர் சத்திரசிகிச்சைக் கூடத்தினுள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக, ஆபத்தான இந்நிலைமை குறித்து அவர் உணர்ந்துள்ளதை உறுதிப்படுத்துவதற்கான  பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கோரப்பட்டார்.

சுமார் ஒரு மணித்தியால முயற்சியின்பின் அவ்வளையத்திலிருந்து வயோதிபர் விடுவிக்கப்பட்டார்.

அவர் அன்றைய இரவு வைத்தியசாலையில் தங்கியிருக்க நேரிட்டது.  மறுநாள் அவர் வீடு திரும்ப வைத்தியர்கள் அனுமதித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .