2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கரணமடித்த நிலையில் 3.5 கி.மீ தூரத்தைக் கடந்த குங்பூ கலைஞர்

Kogilavani   / 2012 ஜனவரி 12 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சீனாவைச் சேர்ந்த குங்பூ கலைஞர் ஒருவர் மூன்றரை  கிலோ மீற்றர் தூரத்தை கரணம் அடித்த நிலையிலேயே கடந்து சென்று பார்வையாளர்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஹு ஜெய்காய் (வயது 47) என்பவரே இவ்வாறு சீனாவின் சாங்கஸா நகர வீதியில் கரணம் அடித்த நிலையில் 3.5 கிலோமீற்றர் தூரத்தை கடந்து சென்றுள்ளார்.

முழுமையான குங்பூ ஆடை அணிந்திருந்த ஹு ஜெய்காய், குங்பூ ஜாம்பவானான பூருஸ் லீ போன்று தோற்றமளித்தார். அவரின் சாகசங்கள் பெரும் எண்ணிக்கையானோரை ஈர்த்தன.

ஹு ஜெய்காய் 3.5 கிலோமீற்றர் தூரத்தை  சுமார் ஒரு மணி நேரத்திற்குள் நிறைவு செய்தார்.  ஆரம்பித்தது முதல் இறுதிவரை அவர் ஒரு இடத்திலும் நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சாகசத்தின்போது ஹு ஜெய்காய்க்கு  பாதுகாப்பாக அவரின் மைத்துனர் நடந்துசென்றார்.

சாதாரண மனிதன் நடப்பதைவிட விட ஹு ஜெய்காய் கரணம் அடித்து வேகமாக செல்வார் என அவரின் மைத்துனர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 12 January 2012 11:51 PM

    சீனாவின் அசுர வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமோ? 3.5 கி.மீ. ஒரு மணித்தியால கரணம் கின்னஸ் சாதனைதான். பாராட்டுகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .