2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தொடர்ச்சியாக 3 நாட்கள் இன்டர்நெட் 'கேம்' விளையாடியவர் மரணம்

Kogilavani   / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர்,  தொடர்ச்சியாக  3 நாட்கள் இணையத்தள விளையாட்டுக்களை விளையாடியதால் உயிரிழந்துள்ளார். இவர் தொடர்ந்து 3 நாட்கள் நித்திரையில்லாமல் இருந்துள்ளதுடன் உணவையும் தவிர்த்து வந்திருக்கின்றார்.

3 நாட்களின்பின் அவர் கோமா நிலையை அடைந்தார். மருத்துவ பரிசோதனையின் பின்,  அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

குறித்த மனிதர் கடந்த மாதம்  10,000யுவான்களை  (சுமார் ஒன்றரை லட்சம் இலங்கை ரூபா) இணையத்தள விளையாட்டுக்காக செலவிட்டுள்ளதாக சீன பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம்மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காக மேற்படி இன்டர்நெட் கஃபேயில் இருந்த பல கணினிகளை பொலிஸார் கைப்பற்றி அவற்றை சோதனையிட்டு வருவதாக அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

சீனாவில்  பதின்மர் பருவத்தினர் உட்பட மில்லியன் கணக்கான மக்கள்  இணையத்தள விளையாட்டில் அதிகம் ஈடுபடுகின்றனர்.  30 மில்லியன் பேர் இணையத்தளங்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

3 வருடங்களுக்கு முன்பும் சீனாவில் இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் இணையத்தள விளையாட்டில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

சீனாவில் 450 மில்லியன் இணையத்தள பாவணையாளர்கள் உள்ளனர்.  இவர்களில் இணைய விளையாட்டு விளையாடுபவர்கள்தான் அதிகமாக காணப்படுகின்றார்கள்  என சீன ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 25 February 2011 08:52 PM

    நான் தப்பித்தேன் ஒரு போதும் நான் கணணியில் இணையதள விளையாட்டுக்களை விளையாடியதே இல்லை, செய்திகளுக்கு கருத்து எழுதுவது கூட ஒருநாளைக்கு ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணிநேரம், அதிகம் போனால்- விடுமுறை நாளாக இருந்தால் கூட. இந்த மனிதர் தொடர்ந்து சரியான உறக்கம் இன்றி உணவு நீரின்றி சூது விளையாடி இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .