2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக 3 பெண்கள் மீது வழக்கு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆண்களை  பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக மூன்று பெண்கள் மீது ஸிம்பாப்வே நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள் மூவரும் அண்மையில் நீதிமன்றில் ஆஜராகினர்.

சகோதரிகளான சோபியா (வயது 26), நெட்ஸாய்  நோக்வரா (24), மற்றும் ரோஸ்மேரி சாக்விஸிரா (28) ஆகிய மூவருமே இந்த பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இம் மூன்று பெண்களும் இவர்களில் ஒருவரின் காதலரான ஆண் ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனரென ஸிம்பாப்வேயின் தேசிய பொலிஸ் பேச்சாளர் ஒலிவர் மென்டிகா தெரிவித்துள்ளார்.

ஆண்களுடன் இப்பெண்கள்  பலவந்தமாக பாலியல் உறவு கொண்டுவிட்டு, அவர்களின் உயிரணுக்களை ஒருவகை மத சடங்கொன்றுக்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இவ்வருடம் மார்ச் மாதம் வீதியில் வாகனமொன்றுக்காக காத்திருந்த 19 வயதுடைய இளைஞனொருவனை தமது வாகனத்தில் ஏற்றிச்சென்ற இப்பெண்கள் அந்த இளைஞனின் முகத்தில் மயக்க மருந்தொன்றை தெளித்துள்ளதாக வழக்குரைஞர் மைக்கல் ரெஸா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த இளைஞனை துப்பாக்கியால் சுடப்போவதாக அச்சுறுத்தி அவ்விளைஞனுடன் பாதுகாப்பற்ற பாலியல் உறவு கொண்டுள்ளதாக வழக்குரைஞர்  மேலும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்றுமொரு சம்பவத்தில், இப்பெண்கள் மூவரும் இணைந்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி, வழிகேட்பது போல் பாசாங்கு செய்து அவரை காரினுள் இழுத்தெடுத்து பலவந்தமாக பாலியல் உறவுகொள்ள நிர்பந்தித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஸிம்பாப்வேயில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆண்கள் மீதான இத்தகைய இப்பாலியல் வன்முறை  குறித்து செய்திகள் வெளிவர ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றம் சுமத்தப்பட்ட மூன்று பெண்களையும் படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • mtmsiyath Thursday, 20 October 2011 11:03 PM

    இது தேவையா காலம் கெட்டு போய்விட்டது.

    Reply : 0       0

    msfasly Thursday, 20 October 2011 11:54 PM

    இனி ஆண்களின் கற்பை பாதுகாக்க ஆண் உரிமை சங்கங்களை உருவாக்க நேரிடும்.

    Reply : 0       0

    ansa Friday, 21 October 2011 03:35 AM

    ஓசியா கிடைக்குதே.... குடுத்து வெச்ச ஜிம்பாப்வே ஆண்கள்....

    Reply : 0       0

    irshan Friday, 21 October 2011 08:20 PM

    ஹாய் , நல்ல இருக்குது இந்த நியூஸ். bay

    Reply : 0       0

    xlntgson Friday, 21 October 2011 09:51 PM

    ஆண்களை அல்ல, இவர்கள் சிறுவர்களை பாலியல் இம்சைக்கு உட்படுத்தி இருக்கின்றனர். இது ஆப்ரிக்க கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்று பல்லாண்டு காலமாக சகித்துக்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. இப்போதுதான் சிறுவர் உரிமை இயக்கங்கள் பகிரங்கப்படுத்துகின்றன. விடை என்னவோ, பூஜ்யம்தான்!
    ஆண்களை பெண்கள் கற்பழித்தனர் என்பது தமிழ் கொலை. வல்லுறவு என்பது இவ்விடத்தில் மட்டுமே பொருந்தும். மெல்லுறவு என்ன என்று விபரிக்க இயலாது. சம்மதமும் கூட மௌனம் என்றால் இது இம்சை சித்திரவதை என்றே தெரிகிறது.

    Reply : 0       0

    மௌனி Monday, 31 October 2011 02:11 AM

    ஆண்களுக்கும் கற்பு உண்டென்பதை நினைவில் கொள்க. ஒருவரின் விருப்பின்றி மேற்கொள்ளப்படும் பாலியல் இம்சை கற்பழிப்பாகவே கொள்ளப்பட வேண்டும். பெண்ணொருத்தி ஆணின் விருப்பின்றி செய்யும் பலாத்காரம் கற்பழிப்பே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .