Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 29 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் டொப்லெஸ்ஸாக - அரை நிர்வாண கோலத்தில் வாகனம் செலுத்திய பெண்ணொருவரை மணித்தியாலத்திற்கு 208 கிலோமீற்றர் (128 மைல்) வேகத்தில் பொலிஸார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
28 வயதான எரின் ஹோல்ட்ஸ்வேர்த் எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒஹையோ மாநிலத்தின் வீதியொன்றில், இரவு நேரத்தில் மதுபோதையில் காரொன்றை செலுத்திய இப்பெண், பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக அதிவேமாக சென்றார். 205 கிலோமீற்றர் வேகத்தில் துரத்திச் சென்றபோதும் அக்காரை நிறுத்துவதற்கு பொலிஸார் தடுமாறினர்.
பின்னர் தொலைதொடர்புசாதனங்கள் மூலம் இருவரை உதவிக்கு அழைத்து, அப்பெண்ணின் கார் சென்ற வழியில் டயர்களை பஞ்சராக்கும் வகையில் கம்பிகளை வைக்கச் செய்தே அக்காரை பொலிஸாரால் நிறுத்தமுடிந்தது.
இறுதியில், காரிலிருந்து அப்பெண் வெளியே வந்தபோதுபொலிஸார் மேலும் அதிர்ந்தனர். அப்பெண் இடுப்புக்குமேல் ஆடை எதுவும் அணிந்திருக்கவில்லை. உள்ளாடை, ஸ்டொக்கிங்ஸ், மற்றும் சப்பாத்து என்பனவற்றை மாத்திரமே அணிந்திருந்தார்.
அவரை பொலிஸார் கைது செய்து கைவிலங்குமாட்டியவுடன் அப்பெண் முரண்டுபிடிக்கத் தொடங்கினார். பொலிஸ் காரில் அழைத்துச் செல்லப்பட்டபோது ஜன்னல் ஒன்றையும் அவர் எட்டி உதைத்தாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தாயான இப்பெண் கடந்த புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுபோதையுடன் வாகனம் செலுத்தியமை, அதிவேகமாக வாகனம் செலுத்தியமை பொலிஸாரிடமிருந்து தப்பியோடியமை, இரத்தப் பரிசோதனைக்கு மறுத்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர் ஏற்கெனவே மதுபோதையுடன் வாகனம் செலுத்தியதாக கைதுசெய்யப்பட்டிருந்தார். இதனால் கைதுசெய்யப்படும்போது, நீதிமன்ற உத்தரவின்பேரில் கணுக்காலில் கண்காணிப்புக் கருவியொன்றையும் அவர் பொருத்தியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
meenavan Saturday, 29 October 2011 04:56 PM
மூன்று பிள்ளைகளின் தாய் மது போதையில் இப்படி கார் செலுத்தினால், அவரது பிள்ளைகள் வளர்ந்த பின்னர் எவ்வாறான கார் ஓட்ட சாதனை செய்யவுள்ளார்களோ? அமெரிக்க பொலிஸாரே ஜாக்கிரதை?
Reply : 0 0
xlntgson Saturday, 29 October 2011 11:03 PM
அங்கே அப்படிஎன்றால் இங்கே எப்படி?
மதுக் கலாச்சாரம் பெண்களிடையே குறைவு. ஆனால் beer பியர் கேட்டுக் கரைச்சல் பண்ணும் பெண்கள் அதிகரித்துவிட்டனராம், வயது போக போக அவர்களும் alcoholசாராயம் அருந்தினால் தான் சுகம் என்று ஆகுவர் திண்ணம்!
Reply : 0 0
Rusaith Tuesday, 01 November 2011 07:56 PM
நல்ல சாதனை. நவீன நாகரீத்தின் வளர்ச்சி.
Reply : 0 0
chelvin Friday, 11 November 2011 12:16 PM
நாகரீகத்தின் உச்சி மது கலாச்சாரம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
2 hours ago
4 hours ago